Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெற்றோரை போற்றும் நேசி!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (22:24 IST)
மாடல்கள்தான் உடல் எடையை குறைக்கிறேன் என்று பட்டினி கிடந்து உடம்பை கெடுத்துக் கொள்வார்கள். இந்த கெட்டப் பழக்கம் இப்போது தமிழ் சினிமாவையும் ஆக்கிரமித்துள்ளது.

வாரணம் ஆயிரம் படத்துக்காக ஆறு மாதம் வெறும் இல ை தழைகளை மடடுமே சாப்பிட்டு பதினேழு வயது பையனாக மாறினார் சூர்யா. விக்ரம் ஒவ்வொரு படத்துக்கும் உடம்பை மெட்டலாக நீட்டியும் குறைத்தும் வருகிறார்.

பிரபல நடிகர்களின் இந்த டெடிகேஷன் சின்ன நடிகர்களிடமும் பரவி வருகிறது. நேசி படத்தில் நடிக்கும் விகாஷ் சில காட்சிகளில் மெலிந்து தெ‌ரிய வேண்டும் என்தற்காக டயட்டில் இருந்துள்ளார். மருத்துவ‌ரின் ஆலோசனையில்லாமல் அவராகவே பட்டினி கிடந்ததால், படப்பிடிப்பில் மயங்கி விழுந்திருக்‌கிறார்.

விகாஷ் ஜோடியாக புதுமுகம் சோனியா நடிக்கும் இந்தப் படம் பெற்றோர்களை நேசிக்க வேண்டும் என்ற கருத்தை மையமாகக் கொண்டு தயாராகியுள்ளது.

இதுபற்றி கூறிய படத்தின் இயக்குனர் சரவண கிருஷ்ணா, காதலியை நேசிப்பது மட்டும்தான் இளைஞர்களின் வேலை என்பது போலதான் இப்போது படங்கள் வருகின்றன. பெற்றவர்களை நேசிப்பதும் அவர்கள் கடமை என்பதை வலியுறுத்தி நேசி படத்தை எடுத்திருக்கிறோம் என்றார்.

படத்தை ரசிகர்கள் நேசிப்பது போல் எடுத்திருந்தால் ச‌ரிதான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யார் சார் இவரு..? விபத்துக்கு பிறகும் விடாமுயற்சியோடு வந்து நின்ற அஜித் குமார்! - வாய்பிளந்த ரசிகர்கள்!

சினிமால நீடிக்கணும்னா இதை கத்துக்கோங்க அனிருத்..! அட்வைஸ் செய்த இசைப்புயல்!

சூர்யாவின் ‘ரெட்ரோ’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த சூர்யா..!

வெண்ணிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கண்ணைப் பறிக்கும் ஜான்வி கபூர்!

டால் அடிக்கும் வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்… ஸ்டன்னிங் ஆல்பம்!

Show comments