கௌதமின் புதிய கூட்டணி!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (22:12 IST)
கௌதம் வாசுதேவ் மேனன், ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் வெற்றி கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்பில்லாத அளவுக்கு உடைந்து விட்டது. கௌதமின் படங்கள் வெற்றி பெற்றதில் இசைக்கு கணிசமான பங்குண்டு. ஹா‌ரிஸ் விலகிய நிலையில் அந்த இடத்தை நிரப்பப் போவது யார்?

இந்தக் கேள்விக்கான பதில், ஏ.ஆர். ரஹ்மான். கௌதமின் சென்னையில் ஒரு மழைக்காலம் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். கௌதம் இசைப் புயலை அணுகியதுதான் ஹா‌ரிஸ் ப ி‌ ரிய காரணம் என சொல்லப்படும் நிலையில் தனது படங்களில் தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மானை பயன்படுத்த திட்டமிட்டுள்ளார், கௌதம்.

சென்னையில் ஒரு மழைக்காலத்திற்குப் பிறுகு திட்டமிட்டபடி தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்குகிறார் கௌதம். யு டிவி இந்தப் படத்தை தய ா‌ ரிக்கிறது. இந்தப் படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர். ரஹ்மானிடம் கேட்டுள்ளார் கௌதம். அவரும் பாஸிட்டிவான பதிலை கூறியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

கௌதம் ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியான விஷயம்தான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜாவின் உடல்நிலை!.. குடும்பத்தார் வெளியிட்ட முக்கிய தகவல்..

கை, காலை மட்டும் ஆட்டிக்கிட்டு சூப்பர் ஸ்டார் ஆகல.. ரஜினி குறித்து எஸ்.பி.முத்துராமன்

கனி வெளியேற்றம் மக்கள் முடிவில்லையா? வழக்கம்போல் அரசியல் செய்ததா விஜய் டிவி?

ஏன் மக்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை? பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கனி வருத்தம்..!

துச்சமாக நினைத்து எட்டி உதைத்த சிவகார்த்திகேயன்! இப்படி மாட்டிக்கிட்டாரே

Show comments