Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனில் அம்பானி கோவையில் அதிநவீன திரையரங்கம்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (21:30 IST)
‌ ரிலையன்ஸ் அனில் அம்பானியின் பிக் சினிமாஸ், அட்லேப்ஸ் என்ற மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனமும் இணைந்து கோவையில் கே.ஜி.பிக் சினிமாஸ் என்ற சொகுசுகள் நிறைந்த திரையரங்கம் ஒன்றை திறக்கவுள்ளது.

இதன் மூலம் கோவையில் உள்ள திரைப்பட ரசிகர்கள் உலகத் தரம் வாய்ந்த திரையரங்க அனுபவத்தை பெறவுள்ளனர் என்று பிக் சினிமாஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரலில் பிக் சினிமாஸ், கே.ஜி.சினிமாஸ் நிறுவனத்துடன் கூட்டுறவு மெற்கொண்டுள்ளது. திரையரங்கத்தில் நடைபெற்ற கட்டிட மற்றும் பிற வேலைப்பாடுகளால் இங்கு ஆகஸ்ட் 2008 முதல் திரைப்படங்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மறு சீரமைப்பு பெற்ற கே.ஜி.சினிமாஸ் திரையரங்கம் தற்போது குளுரூட்டப்பட்ட ஆடிட்டோரியங்கள், புஷ்-பேக் இருக்கைகள், சுத்தமான கழிவறைகள் ஆகியவற்றுடன் வாய்க்கு ருசியான உணவுப் பொருட்களை வழங்கும் கேன்டீன்கள் ஆகிய வசதிகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

திரையரங்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அழகான சில வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்லதாக கே.ஜி. சினிமாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச தரம் வாய்ந்த டிஜிட்டல் ஒலி அமைப்புகள், ஸெனான் ப்ரொஜெக்டர்கள் இத்திரையரங்குகளின் சிறப்பம்சமாகும்.

திரைப்படத்திற்கான டிக்கெட்டுகளை இணையதளம் வழியாகவும் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

Show comments