தமிழுக்கு வந்த லால் ஜோஸ்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (21:29 IST)
இதோ அதோ என்று பருவ மழையாக போக்கு காட்டிய லால் ஜோஸின் தமிழ் பிரவேசம் கடைசியில் நடந்தேவிட்டது. படத்தின் பெயர் மழை வரப்போகுது. என்ன பொருத்தமான பெயர்!

மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வந்த நேரம், மீசை மாதவன் படத்தின் மூலம் நடிகர் திலீப்பை, சூப்பர் ஸ்டார்களுக்கு போட்டி ஸ்டாராக முன்நிறுத்தியவர் இயக்குனர் லால் ஜோஸ்.

விக்ரம் நடிக்க ஆசைப்பட்ட பெண்மை கலந்த திலீப்பின் 'சாந்துபொட்டு' கேரக்டரை உருவாக்கியவரும் இவர்தான். இவரது லேட்டஸ்ட் ஹிட், கிளாஸ்மேட்ஸ் தமிழில் நினைத்தாலே இனிக்கும் என்ற பெயரில் தயாராகி வருகிறது.

சித. செண்பககுமாரின் கூல் புரொடக்சனின் மழை வரப்போகுது படம் மூலம் தமிழுக்கு வருகிறார் லால் ஜோஸ். படத்தின் கதை, திரைக்கதை ஜேம்ஸ் ஆல்பட், வசனம் பாடலாசிரியர் ஜெயந்தா, கேமரா விஜய் உலகநாத், இசை வித்யாசாகர்.

படத்தின் நடிகர் நடிகைகள் தேர்வில் பிஸியாக இருக்கிறார் லால் ஜோஸ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தாய் கிழவி' வசூல் வேட்டை: இரண்டாம் நாளில் அதிரடி முன்னேற்றம்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: துபாயில் சிக்கிய நடிகர் அஜித்துக்கு என்ன ஆச்சு? ரசிகர்கள் கவலை..!

குழந்தை பெற திருமணம் அவசியமில்லை.. கருமுட்டைகளை சேமித்து வைத்துள்ளேன்: பிரபல நடிகை

சங்கீதா ஒரு கடுமையான விமர்சகர், ஸ்ட்ரிக்ட் ஆக கண்காணிப்பார்.. விஜய் அளித்த பேட்டி..!

ரஜினி - கமல் இணையும் படத்தில் வில்லனாக அந்த நடிகர்!.. செம டிவிஸ்ட்!..

Show comments