பசுபதிக்கு ஜோடி தேடும் இயக்குனர்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (21:11 IST)
சக்கர வியூகம் என்ற படத்தை இயக்கியவர் உதயபானு மகேஸ்வரன். இந்தியில் பிரபலமான ஒளிப்பதிவாளர் நட்ராஜ் இ‌தி‌ல் நடி‌த்தா‌ர். மிகவும் வித்தியாசமான கதையை மிக அழகாக இயக்கியிருந்தார்.

இப்படத்திற்கு பிறகு தற்போது 'சந்தை' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் ஹீரோ பசுபதி. முற்றிலும் ஒரு அற்புதமான கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

கொஞ்சம் இடைவெளிக்குப் பின் இப்படத்தை இயக்குவதால் கதை விவாதத்தை மும்பையில் முடித்துவிட்டு வந்திருக்கிறார். ஜனவரி மாதம் படத்தை துவங்க இருப்பதால் அதற்கான வேலைகளில் தீவிரமாக உள்ளார்.

மேலும் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆர். மதி மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அநேகமாக ஹீரோயின் புதுமுகமாக இருந்தால் நல்லது என நினைத்த இயக்குனர் நாயகியைத் தேடிவருகிறார்.

இப்படத்திலும் தன் நெருங்கிய நண்பரான நட்ராஜுக்கு நடிக்க வாய்ப்பு உள்ளதா? என்றுதான் தெரியவில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனை நம்பி வெயிட் பண்ண முடியாது!.. ஓப்பனாக பேசி வாய்ப்பை மறுத்த அஸ்வத்!...

Youth: லாபத்தில் பங்கு.. கென் கருணாஸுக்கு கொட்டும் பணம்!.. லக்குன்னா இதுதான்!...

பாரதிராஜாவின் தற்போதைய நிலைமை!.. வெளியான புகைப்படம்!.. ரசிகர்கள் அதிர்ச்சி..

இளமை திரும்புதே!.. மம்முட்டியின் இளமைக்கு ரகசியம் இதுதான்!..

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

Show comments