பட பூஜையில் நடந்த பண பூஜை!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (21:04 IST)
பார்க்கர் பிரதர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக அனிதா ரூபஸ் தயாரிக்கும் படம் 'பைசா'. இப்படத்தின் தொடக்க விழா நேற்று ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்தது.

' பைசா' என்று படத்திற்கு பெயர் வைத்ததனால் தோரணங்களுக்கு பதிலாக 'டூப்ளிகேட்' நோட்டுகளை தோரணங்களாக தொடங்கவிட்டிருந்தது மிகவும் புதுமையாகவும், வித்தியாசமாகவும் இருந்தது.

நடிகர் பார்த்திபன்தான் இப்படியெல்லாம் யோசிப்பார்... நீங்களும் இப்படி வித்தியாசமாக யோசித்திருக்கிறீர்களே என்று பூஜையில் கலந்துகொண்ட சினிமா புள்ளிகள் இப்பட இயக்குனர் ஷாந்தி நிகேதனை பாராட்டியிருக்கின்றனர்.

முதுமுகங்களான சச்சின்-லாவண்யா ஹீரோ-ஹீரோயினாக நடிக்கும் இப்படத்திற்கு இசை சபேஷ்-முரளி. பாடல்களை பழனிபாரதி எழுதியிருக்கிறார்.

மிகவும் வித்தியாசமான கதைகளத்துடன் புதுமையான காதலை மையமாகக் கொண்ட படம் இது எனும் இயக்குனரிடம் 'பைசா' தலைப்பு பற்றி கேட்டால் சஸ்பென்ஸ் என்கிறார். எப்படியோ 'பைசா'வுக்கு போட்ட பைசா வந்தால் சரி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் பட நாயகி சங்கவி ஞாபகம் இருக்கிறதா? திடீரென்று ஆன்மீகத்தில் இறங்கியதால் பரபரப்பு..

ரஜினி கமல் இணையும் படத்தில் எனக்கு வந்த சிக்கல்... மனம் திறந்த லோகேஷ்

கைவிட்ட நீதிமன்றம்... ஜனநாயகனுக்கு அடுத்த அடி!.. தள்ளிப்போகும் ரிலீஸ்!..

நாய் குறைக்கும் போது என்னதான் நடந்தது? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கம்ருதீன்

துபாயில் வீடு வாங்கும் சிம்பு!.. விலை என்ன தெரியுமா?!...

Show comments