பணம் பத்தும் செய்யும்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (21:00 IST)
இயக்குனர் பிரபுசாலமன் இயக்கும் 'லாடம்' படம் கிட்டத்தட்ட முடிவு பெற்று ரிலீசுக்கு தயாரான நிலையில் இருக்கிறது.

இதற்கிடையில் அப்படத்தை வெளியிடக்கூடாது என்று கோர்ட்டில் வழக்கு தொடுத்தார் தயாரிப்பாளர் சோழா கிரியேஷன்ஸ் பொன்னுரங்கம். இவர் தலைவாசல் என்ற படத்தை தயாரித்தவர்.

பிரபுசாலமன் லாடம் படத்தின் கதையை முதலில் சொன்னது சோழா பொன்னுரங்கத்திட்ம் தானாம். கதை கேட்டவுடன் இயக்குனருக்கு அட்வான்ஸ் தொகை கொடுத்ததோடு, பல டெக்னீஷியன்களுக்கும் அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார்.

அதன்பின் ஏற்பட்ட பைனாக்ஸ் பிரச்சனை காரணமாக படம் தள்ளிப்போக... அதே கதையை காஸ்மோஸ் என்டர்டெய்ன்மெண்ட் ஜே.பி. குமார், டி.வி. செளத்ரி ஆகியோரிடம் சொல்லி படத்தையும் ஆரம்பித்துவிட்டார்.

இதனால் கடுப்பான பொன்னுரங்கம் கேஸ் போட, லாடத்தை வெளியிட கோர்ட் இடைக்காலத் தடை விதித்தது.

அதன்பின், படம் நன்றாக வந்திருப்பதால்... ஒரு பெரிய தொகை தருவதாக பேரம் பேச, ஒத்துக்கொண்டு தற்போது வழக்கை வாபஸ் வாங்க முடிவு செய்திருக்கிறார் பொன்னுரங்கம்.

ஆக லாடத்தின் விலங்கு உடைக்கப்பட்டு விரைவில் ஓட இருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷை போல ஒருவர் பிறந்து வரவேண்டும்!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

என் ஆபாச படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்!.. ஜான்வி கபூர் கோபம்!..

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

Show comments