இயக்கும் தயாரிப்பாளர்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (20:52 IST)
ஜி கம்பெனி மூலம் சிலந்தி என்ற படத்தை டிஜிட்டல் கேமராவில் எடுத்து வெளியிட்டார் தயாரிப்பாளர் சங்கர்.

நல்ல வரவேற்பை பெற்றதோ? குறைந்த பட்ஜெட்டில் ஹெச்.டி. கேமராவில் படம் எடுக்கலாம் என்ற நம்பிக்கை கொடுத்த படம் சிலந்தி. தற்போது அதே ஜி கம்பெனி நிறுவனம் மூலம் 'உதிரம்' என்ற படத்தை தயாரித்து, இயக்கியும் வருகிறார் சங்கர்.

இந்தப் படத்தை சிலந்தி படத்தை இயக்கிய ஆதியின் உதவியாளர் ராஜு கோபி என்பவரைத்தான் இயக்குனராக நியமித்தார். பின் அடுத்தவரை ஏன் வளரவிட வேண்டும் நாமே இயக்கவும் செய்யலாமே என்று முடிவு செய்து தற்போது இயக்கி வருகிறார்.

அத்தோடு சிலந்தி படத்தை ஆந்திராவில் டப்பிங் செய்வதற்காக கணிசமான தொகை கொடுத்து அனு ரோஷினி பிலிம்ஸ் என்ற நிறுவனம் வாங்கியிருப்பதால் உற்சாகத்தோடு உதிரம் சிந்தி உழைத்து வருகிறார் சங்கர்.

பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடவும் முடிவு செய்திருக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷ் படத்திற்காக சாதியை கைவிடும் மாரி செல்வராஜ்!.. செம அப்டேட்..

போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட ஈரான் உச்ச தலைவர்.. பாகிஸ்தானில் முக்கிய பேச்சுவார்த்தை..!

புஷ்பா 2 சாதனையை முறியடித்த துரந்தர் 2!.. வசூல் சும்மா கொட்டுது!..

எனக்கு தெரிஞ்சது திரிஷா வீடு மட்டும்தான்!. ராணாவின் பழைய வீடியோ வைரல்!...

நீங்களே ஒரு தாலி வரம் கேடு வந்தேன் பாடலைதானே சுட்டுள்ளீர்கள்? கானா தினேசை கேட்கும் நெட்டீசன்கள்

Show comments