தோல்வியில் துவண்ட ஹீரோ!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (20:49 IST)
வெயில் படத்திற்குப் பிறகு பரத்துக்கு பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. படம் ஓரளவுக்கு வெற்றிதான் என்றாலும் பரத்தைவிட பசுபதிதான் அதிகம் பேசப்பட்டார்.

அதற்குப்பின் திருமுருகன் இயக்கிய எம் மகன் ஓரளவுக்கு ஓடியது. அதற்கடுத்து எந்தப் படமும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. கூடல் நகர், சென்னை காதல், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, தற்போது வெளியான சேவல் வரை வரிசையாக தோல்விப் படங்கள்.

அதனால் மனம் நொந்தவருக்கு தற்போது ஆறுதல் தரும் படமாகவும், நம்பிக்கை படமான ஆறுமுகத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

சுரேஷ் கிருஷ்ணா இயக்குவதால் மிகவும் தெம்புடன் இருக்கிறார். இருந்தாலும் காதல் படத்தை போல மிகப்பெரிய வெற்றிப்படம் கொடுக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளார். அதற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு ஒரு சில கதைகளை ஓ.கே. பண்ணி வைத்திருக்கிறார்.

ஆறுமுகம் படம் வெளியானவுடன் அந்தப் படத்தில் நடிக்கவுள்ளார். எப்படிப்பட்ட நடிகராக, இயக்குனராக இருந்தாலும் தற்போதைய ஹிட்தான் பேசப்படும் என்பதை தெளிவோடு புரிந்து வைத்துள்ளார் பரத்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' அடுத்த பாகத்தின் டைட்டில் இதுதான்.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!

தவெக கொடி கலரில் சேலை கட்டிய பிரபல நடிகை.. விஜய் கட்சியில் சேர்கிறாரா?

'துரந்தர்' ஓடிடியில் ரிலீஸ்.. ஆனால் 14 நிமிடங்களை கட் செய்தது நெட்பிளிக்ஸ்.. என்ன காரணம்?

விஜயகாந்துக்கு அந்த நடிகை செட்டாகுமா? நல்ல வேளை படம் தப்பிச்சுச்சு..

ஏஆர் ரஹ்மான் சிறுபான்மையினர்.. ஜிவி பிரகாஷ் பெரும்பான்மையினரா? சீமான் கேள்வி

Show comments