தர்காவில் பொக்கிஷம்?

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (20:47 IST)
இத்தேஷ் ஜெபக் தயாரிப்பில் சேரன் இயக்கி நடிக்கும் படம் பொக்கிஷம். பால்யத்தை நினைவுகூரும் காதல் கதையான இதில் சேரன் ஜோடியாக பத்மப்ரியா நடிக்கிறார்.

பாபா முதல் மோதி விளையாடு வரை பல முக்கிய படங்களுக்கு வசனம் எழுதிய எஸ். ராமகிருஷ்ணன் பொக்கிஷத்தில் முதல் முறையாக சேரனுடன் இணைந்து பணியாற்றுகிறார். படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பவர் கவிஞர் யுகபாரதி.

பொக்கிஷத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நாகூரில் நடைபெற உள்ளது. மொத்தம் 25 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

நாகூரின் புகழ்பெற்ற தர்காவிலும் படப்பிடிப்பு நடத்த சேரன் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாகூரில் படப்பிடிப்பு முடிந்த பிறகு பாடல் காட்சிகளுக்காக மலேசியா செல்கிறது பொக்கிஷம் யூனிட்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சென்சார் விவகாரம்!.. 2 நாள் கழித்து கருத்து சொன்ன கமல்!...

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

Show comments