Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் - கமல் அறிக்கை!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (20:36 IST)
நவ. 7 கமலின் பிறந்தநாள். கமல் ரசிகர்களுக்கு இந்நாள் திருவிழா. இந்த முறை சின்ன மாற்றம். ஈழத்தில் தமிழர்கள் இறந்து கொண்டிருக்கும் நிலையில் எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் கமல். அவர் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு.

என் மதிப்பிற்கும் அன்புக்குமுரிய இயக்கச் சோதரர்களுக்கு வணக்கம்.

நவ. 7 ஆம் தேதியை எனது பிறந்தநாளாகக் கொண்டாடி மகிழ ஆவலாக உள்ள எனது இயக்கத் தோழர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.

ஈழத்தில் நடந்துவரும் போரினால் உயிரை பலரும், பிறந்த நாட்டையே பலரும் இழந்துவரும் இவ்வேளையில், தனி ஒரு மனிதன் பிறப்பு கொண்டாடப்படும் தகுதியை இழக்கிறது.

10,000 ஆண்டுகளே நிரம்பப்பெற்ற நமது மனித கலாச்சாரம் இன்னும் முழுமைப் பெறாத நிர்மாணப் பணி. அதற்கு பேருதாரணமே உலகெங்கிலும் நிகழும் போர்கள்தாம்.

மத ஜாதி இன மொழி நிற வேறுபாடுகளைக் கூறி நமது இனத்தையே கூறுபோட்டு விற்கும் வியாபாரம் கலந்த அரசியலுடன் எனக்கு இருந்து வந்த கருத்து வேறுபாடு இப்போது வேரூன்றி நிலைத்துவிட்டது.

அத்தகைய வியாபார அரசியல் நடத்தியதால் நிகழந்த அவலம்தான் ஈழப் போரும் கூட. இலங்கை நமது அண்டை நாடு என்ற சமீபம் போக, ஈழப் போர் நம் தற்கால தமிழ் சரித்திரம் என்ற நெருக்கமும் என்னை எந்த கொண்டாட்டத்திலும் மனம் லயிக்க முடியாமல் தடுக்கிறது.

இதை ஒரு அரசியல் விமர்சனமாக நான் சொல்லவில்லை. மனிதனை மனிதனே கொல்லும் இந்தப் போர் இந்த நவீன யுகத்தின் ஊடகங்களால் நம் காது கேட்க, கண்ணுக்கெட்டும் தூரத்தில் நடக்கிறது.

இதன் முடிவு என்னவாக இருக்கும் என யூகிக்கும் அரசியல் சாதுர்யம் எனக்கில்லை. நான் நிஜமாகவே சாதாரணன். மனித சோகங்கள் என்னை வெகுவாக பாதிக்கின்றன.

இந்தச் சோகச் சூழலுக்கு முடிவு சொல்லும் ஞானமில்லாவிடினும், அடுத்த வீட்டில் அடுத்தடுத்து இழவுக் கூட்டங்கள் நடக்கும் இவ்வேளையில், நம் வீட்டில் குதூகல கொண்டாட்டங்கள் நடப்பது மனிதநேயம் சார்ந்த செயலாக இராது.

வழக்கமாக நான் பிறந்ததை கொண்டாடும் இத்தினத்தை, நான் போற்றும் மொழியை பேசிய ஒரே குற்றத்திற்காக மட்டுமே, இறந்து கொண்டிருக்கும் சாமானியருக்கு அனுதாபம் தெரிவிக்கும் நாளாக செலவிடுங்கள். இறந்தவருக்கு இரங்கல் தெரிவிக்கும் நாளாகச் செலவிடுங்கள்.

நான் பிறந்ததற்கான பயன்களில் ஒன்று இதுவாகவும் இருப்பின், பெருமை கொள்வேன்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

Show comments