மர்மயோகிக்கு தடங்கல்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (20:35 IST)
கமல் இயக்கி நடிக்கும் சரித்திர‌ப் படமான மர்மயோகிக்கு திடீர் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

தசாவதாரத்துக்குப் பிறகு கமல் நடிக்கும் படம் மர்மயோகி. படத்தை கமலே இயக்கி நடிக்கிறார். சரித்திர படமான இதில் நடிக்க த்ரிஷா, ஸ்ரேயா, ஹேமமாலினி, வையாபுரி, ஷோபனா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்புக்காக பிரமாண்ட அரங்குகள் போடப்பட்ட நிலையில் படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளார் கமல்.

மர்மயோகி படத்தை முதலில் பிரமிட் சாய்மீரா தயாரிப்பதாக சொல்லப்பட்டது. பட்ஜெட் அதிகமாக இருப்பதால் அவர்கள் படத்தை தயாரிக்க தயக்கம் காட்டுவதாக வந்த தகவல்களை கமல், பிரமிட் சாய் மீரா இரு தரப்புமே மறுத்தது.

இந்நிலையில் படப்பிடிப்பு தள்ளிப் போக தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட அதிருப்திதான் காரணம் என கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக்கானுக்கு பதில் அந்த நடிகர்!.. ஜெயிலர் 2-வில் கேமியோ பண்ணப்போறது அவரா?..

6 பேருக்குதான் அக்சஸ்!. ஜனநாயகன் படம் லீக் ஆனது எப்படி?.. பரபரப்பு பின்னணி?!..

எல்லார் மேலையும் ஆக்‌ஷன் எடுங்க!.. விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த எஸ்.கே!...

ரிலீசுக்கு முன்பே லீக்கான ஜனநாயகன் காட்சிகள் - எச்.வினோத் போட்ட பதிவு

ஜனநாயகன் படத்த டவுன்ட்லோட், ஷேர் பண்ணா லீகல் ஆக்‌ஷன்!.. தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை!...

Show comments