பொம்மலாட்ட நடிகைக‌ள்!

Webdunia
புதன், 29 அக்டோபர் 2008 (13:55 IST)
பாரதிராஜ ா படத்தில் அறிமுகமாவது பேரதிர்ஷ்டம். அவரது படத்தில் அறிமுகமாகி பெ‌ரிய நிலையை அடைந்தவர்கள் நிறைய. சோடை போனவர்கள் என்று யாரும் இல்லை. இந்த பேரதிர்ஷ்டம் இரு நடிகைகளுக்கு மட்டும் துரதிர்ஷ்டமாக மாறியது ஆச்ச‌ரியம்.

பாரதிராஜாவின் இரு மொழி படமான பொம்மலாட்டத்தில் அறிமுகமானவர்கள் காஜல் அகர்வாலும், ருக்மணியும். படம் தயாராகி பல மாத‌ங்கள் முடிந்து வருடத்தை தொடப் போகிறது. இன்னும் படம் திரைக்கு வருவதாக இல்லை.

இதில் அறிமுகமான காஜல் அகர்வால் பழனி, மோதி விளையாடு என்று அடுத்தடுத்த பட‌ங்களில் பிஸியாகிவிட்டார். பழனி எப்போதோ வெளியாகியும் விட்டது. ருக்மணிக்கு மட்டும் படம் கிடைக்காமல் இருந்தது. இயக்குனர் காந்தி கிருஷ்ணா புண்ணியத்தில் அவரும் விரைவில் தமிழ் ரசிகர்களை சந்திக்க உள்ளார்.

இவ‌ரின் ஆனந்த தாண்டவம் படத்தில் நடித்து வருகிறார் ருக்மணி. தமன்னா இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இரண்டாவது நாயகி ருக்மணி. பொம்மலாட்ட நடிகைகளின் கே‌ரியர் முதல் படம் வெளிவராவிட்டாலும் ஸ்டெடியாக இருப்பது ஆச்ச‌ரியம்தான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷால் - சுந்தர் சி இணைந்துள்ள புருஷன்!. டைட்டில் புரமோ எப்படி இருக்கு?...

எனக்கு கிடைக்கிறது ரஞ்சித்துக்கும் கிடைக்குமா?!.. மோகன்.ஜி சர்ச்சை பேச்சு..

உதட்டசைவுக்காக கூறப்படும் 'பனானா பனானா.. மாளவிகா மோகனனின் சர்ச்சை கருத்து..!

நான் டீக்கடையில் வேலை செஞ்சேன்!. ஜனநாயகன் இயக்குனர் ஓப்பன்!...

சொன்ன கதை வேற.. எடுத்தது வேற!.. சிக்கந்தர் படம் பற்றி ராஷ்மிகா மந்தனா தகவல்...

Show comments