சினேகாவுக்கு அம்பாள் அருள்!

Webdunia
புதன், 29 அக்டோபர் 2008 (13:23 IST)
ஆந்திரா அரசு சிறந்த நடிகர்களுக்கு வழ‌ங்கும் நந்தி விருது சினேகாவுக்கு கிடைத்திருக்கிறது.

2005- ம் ஆண்டு தெலு‌ங்கில் ராதா கோபாலம் என்ற படத்தில் நடித்தார் சினேகா. தெலு‌ங்கு நடிகர் ஸ்ரீகாந்த் சினேகாவுடன் நடித்திருந்தார். இப்படம் வெளியான போது அனைவ‌ரின் பாராட்டையும் பெற்று வெற்றிகரமாக ஓடியது. படத்தை பாபு என்பவர் இயக்கியிருந்தார். மணிசர்மா படத்துக்கு இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சினேகா நந்தி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய சினேகா, இந்த வருடம் தேசிய விருது கிடைக்க வாய்ப்புள்ள பட‌ங்கள் அமைய வேண்டும் என அம்பாளை வேண்டிக் கொண்டதாக கூறியிருந்தார். அம்பாளின் அருள், நந்தி விருதுடன் ‌சினேகாவுக்கு சித்தித்திருக்கிறது.

அடுத்து தேசிய விருதை எதிர்பார்க்கலாமா?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துபாயில் வீடு வாங்கும் சிம்பு!.. விலை என்ன தெரியுமா?!...

ரஜினி - கமல் படம் டேக் ஆப் ஆகாமல் போனது ஏன்?.. ஓப்பனாக பேசிய லோகேஷ்!..

பழுதடைந்த சார்ஜர் கொண்ட மொபைல் ஃபோன்.. மாதவிடாய் நின்ற காலத்தினை ஒப்பிட்ட பிரபல நடிகை..

வடநாட்டு அரசியலில் ஒரு திருப்பம் ஏற்படும் என ரஜினி என்னிடம் சொன்னார்: வைரமுத்து

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

Show comments