வேகமான பட‌ப்‌பிடி‌ப்‌பி‌ல் திருவாசகம்!

Webdunia
செவ்வாய், 28 அக்டோபர் 2008 (19:34 IST)
பூஜை போடப்பட்டு கிட்டத்தட்ட நின்று போகும் நிலையில் இருந்த 'திருவாசகம்' படம் தற்போது உயிர் பெற்று வேகமாக படப்பிடிப்பு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் கும்பகோணத்தில் இருபது நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்திருக்கிறார்கள். அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையிலும், ஊட்டியிலும் நடத்தப் போவதாக கூறினார் இப்பட இயக்குனர் ராஜாமோகன். திரைப்படக் கல்லூரி மாணவரான இவருக்கு இது முதல் படம்.

' ஆல்பம்' படத்தில் நடித்த ராஜேஷ்தான் இப்படத்தின் ஹீரோ. நாயகியாக 'காதல்' படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்த சரண்யா நடிக்கிறார். மேலும் ராமேஸ்வரனின் ஒளிப்பதிவும், ஜெஸ்ஸிக் கி·ப்டின் இசையும், கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகளும் இந்த 'திருவாசகம்' படத்திற்கு பெரும் பலமாக இருக்கும் என்கிறார் இயக்குனர்.

மேலும், இப்படத்தின் தயாரிப்பாளர்களும், தன் நண்பர்களுமான மைக்கேல், துரை பிரபாகரன், நெடுமான் ஆகியோருடைய ஒத்துழைப்பும் சிறப்பாக இருப்பதால் தான் நினைத்தபடி, நினைத்த லொகேஷன்களில் படப்பிடிப்பை நடத்துவது மகிழ்ச்சியாக உள்ளதாகவும் குறிப்பிடுகிறார் இயக்குனர் ராஜாமோகன்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சென்சார் விவகாரம்!.. 2 நாள் கழித்து கருத்து சொன்ன கமல்!...

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

Show comments