சினிமாவுக்குள் சினிமா!

Webdunia
செவ்வாய், 28 அக்டோபர் 2008 (19:24 IST)
சினிமாவைப் பற்றி சினிமா எடுப்பது அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒரு சில படங்கள் வெற்றியடைகின்றன, சில தோல்வியடைகின்றன.

சமீபத்தில் கூட 'கோடம்பாக்கம்', வெள்ளித்திரை ஆகிய படங்கள் வெளியாகி ஓரளவு வெற்றியும் பெற்றன. அந்த வகையில் சினிமா பற்றி மீண்டும் ஒரு படம் தயாராகிக் கொண்டு இருக்கிறது.

படத்தி‌ன் பெயர் 'நூறாவது நாள்'. இப்படத்தை பி. வாசுவின் உதவியாளர் ஸ்ரீகண்ணா இயக்குகிறார். படத்தின் ஹீரோ ஜெரா புதுமுகம், ஹீரோயின் சுஜிபாலா.

கோடீஸ்வர பட அதிபரான தன் தந்தையின் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறார் ஹீரோ. அதற்கு ஒப்புக்கொள்ளாமல் பிரபல ஹீரோக்களை வைத்தே படமெடுக்கும் அவர் புதுமுகத்தால் பணத்துக்குத்தான் கேடு, என் மகனாக இரு‌ந்தாலும் இதற்கு நான் சம்மதிக்கமாட்டேன் என்கிறார். இந்நிலையில் அப்பாவுடன் சவால் விட்டு தனியாளாக போராடி ஜெயிக்கும் கதைதான் இது.

இப்படி பல தயாரிப்பாளர்கள் சொல்லியிருந்தால் இங்கே நிறைய தயாரிப்பாளர்கள் ஆண்டியாகியிருக்க மாட்டார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

மங்காத்தா முன் ‘திரெளபதி 2’ நிற்க முடியவில்லை: ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மோகன் ஜி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Show comments