மீண்டும் ஒரு போலீஸ் கதை!

Webdunia
செவ்வாய், 28 அக்டோபர் 2008 (17:37 IST)
தற்போது பிஸியான ஹீரோ யார் என்று கேட்டால் தயங்காமல் சொல்லும் பெயர் ஸ்ரீகாந்த்.

ரசிக்கும் சீமானே, பூ, மாணவர் தினம், மா என சொல்லிக் கொண்டே போகலாம். அப்படி சசி இயக்கத்தில்ஸ்ரீகாந்த் நடித்த 'பூ' விரைவில் வெளியாக இருக்கிறது.

காதல், சென்டிமெண்ட், ஆக்சன் என நடித்து வந்தவர், தற்போது முத‌ல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். படம் 'இடதுவலது'.

ஏகப்பட்ட என்கவுண்ட்டர் படங்கள் வந்துக் கெண்டிருக்கும் நிலையில் மீண்டுமா? என்று கவலையடையத் தேவையில்லை. டேய்... டேய் என்று கத்திக்கொண்டோ, குறுகலான சந்துகளில் தடிமனான வில்லன்களை விரட்டி விரட்டி சுடுவது போன்ற காட்சிகள் எதுவும் இல்லை என்கிறார் ஸ்ரீகாந்த்.

மிகவும் வித்தியாசமான கதையில் தன் உயரதிகாரியோடு ஏற்படும் ஈகோவால் அப்பாவி பொதுமக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதும், அதை எப்படி சாமர்த்தியமாக சரி செய்கிறார் என்பதுதான் கதையாம்.

காக்கி சட்டைகளின் அரைத்தமாவை அரைப்பது போல் இல்லாமல் வித்தியாசமாக இருந்தால் சரிதான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜாவின் தற்போதைய நிலைமை!.. வெளியான புகைப்படம்!.. ரசிகர்கள் அதிர்ச்சி..

இளமை திரும்புதே!.. மம்முட்டியின் இளமைக்கு ரகசியம் இதுதான்!..

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

Show comments