ஒரு வில்லன் நல்லவனாகிறார்!

Webdunia
செவ்வாய், 28 அக்டோபர் 2008 (16:26 IST)
தொடர்ந்து வாய்ப்பு இல்லாமல் போனதால் அவ்வப்போது படங்களில் தலைகாட்டிக் கொண்டிருக்கிறார் வில்லன் நடிகர் ஆனந்தராஜ்.

அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் 'கொட்டாரம் தாலுகா திருநெல்வேலி ஜில்லா'. இதில் எம்.ஜி.ஆர். போல அரும்பு மீசை கெட்டப்பில் வித்தியாசமான போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம்.

நீண்ட நாளைக்குப் பின் இப்படி அருமையான கேரக்டர் கிடைத்திருக்கிறது என நண்பர்களிடம் பெருமையுடன் சொல்லி வருகிறார் ஆனந்தராஜ்.

அதாவது அவரது எல்லைக்குட்பட்ட ஊரில் ரவுடித்தனம் செய்பவர்களை கூட்டி வந்து மீசையை எடுத்துவிட்டு மொட்டையாக அனுப்பும் அதிரடி இன்ஸ்பெக்டராம் இவர்.

இப்படி ரவுடிகளை அசிங்கப்படுத்துவதோடு அந்த ஊரில் உள்ள ஒரு காதல் ஜோடியை சேர்த்தும் வைக்கிறாராம்.

இத்தனைப் படங்களில் காதல் ஜோடிகளுக்கு வில்லனாக இருந்தவர் இந்தப் படம் மூலம் காதலர்களுக்கு நல்லது செய்வதான பாத்திரம் என்று நெகிழ்ச்சியுடன் கூறி வருகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆறு வருஷமா வெயிட் பண்ணி! சிம்புவுக்காக காத்திருந்து.. உஷாரான தேசிங்கு பெரியசாமி

‘மங்காத்தா’ ரீ ரிலீஸில் ஒரு குட் நியூஸ்! அஜித்தே சொன்ன பிறகு நடக்காம இருக்குமா?

மங்காத்தா ரீரிலீஸ் மாதிரியே தெரியல.. முதல்முறை பார்ப்பது போல் உள்ளது: அஜித் ரசிகர்கள் உற்சாகம்..!

சாட்டைய தூக்குனவருக்கே சாட்டையடி! ஜனநாயகனை விடாமல் துரத்தும் சென்சார் போர்டு

ஜனநாயகனுக்கு தேதி குறித்த தயாரிப்பு நிறுவனம்!.. எல்லாம் சரியா வருமா?...

Show comments