நன்றி மறவாத நடன இயக்குனர்!

Webdunia
வெள்ளி, 24 அக்டோபர் 2008 (17:28 IST)
ஆரம்பத்தில் துணை நடனக் கலைஞராக இருந்து பல படங்களில் கூட்டத்தோடு கூட்டமாக ஆடிவந்தவர் நடிகர் லாரன்ஸ். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக நடன நுணுக்கங்களை கற்று நடன இயக்குனராகி தற்போது வெற்றிப்பட இயக்குனர்கள் வரிசையிலும் இடம் பிடித்திருக்கிறார்.

அப்படி ஆரம்பத்தில் தனக்கு ஆட சினிமாவில் சான்ஸ் கொடுத்து தன் குழுவில் வைத்துக் கொண்டவர் நடன இயக்குனர் ஜான்பாபு. இவர் குஷ்புவுடன் ஆடிய 'ஒத்தரூபா தாரேன்' பாட்டு மிகப் பிரபலம்.

ஆரம்பத்தில் அரவணைத்த ஜான்பாபுவை தற்போது ஒரு விழாவில் சந்தித்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். கீழே அமர்ந்திருந்த ஜான்பாபுவை மேடைக்கு அழைத்து 'இவர் இல்லையென்றால் நான் இல்லை' என்று பெருமிதப்பட்டிருக்கிறார் லாரன்ஸ்.

இவரின் பாராட்டைக் கண்ட ஜான்பாபு மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறார். லாரன்ஸ் பவுண்டேஷன் பெயரில் பல ஆதரவற்றவர்களை அரவணைக்கும் இவர், தன் குருவை மறப்பாரா என்ன?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது? சூப்பர் ஸ்டாருடன் ஒரு படம் கமிட் ஆகியுள்ளேன்: கெளதம் மேனன்

பார்வதிக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்.. பிக்பாஸ் கொடுத்த ரெட் கார்டுக்கு நெட்டிசன்கள் வரவேற்பு..!

பராசக்தி திரைப்படம் சிவகார்த்திகேயனின் ‘பாட்ஷா’.. இயக்குனர் ஆர்.கண்ணன் பேச்சு..!

"தடைகளைத் தாண்டி வரும் பராசக்தி": சுதா கொங்கரா நெகிழ்ச்சி - பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

கனி வெளியேறியபோது வருத்தப்பட்ட ரசிகர்கள் பாரு வெளியேறிய போது கொண்டாடுகின்றனர்.. இதுதான் பிக்பாஸ்..!

Show comments