சேர நாட்டில் சோனா!

Webdunia
புதன், 22 அக்டோபர் 2008 (17:12 IST)
மிருகம் படத்தில் நடித்தபோதே யார்யா இது என்று திரும்பிப் பார்க்க வைத்தவர் சோனா. குசேலன் படம் சோனாவை சூப்பர் ஸ்டார் வரை கொண்டு சேர்த்தது.

இவர் ஹீரோயினாக நடித்த பத்து பத்து படம் தயா‌ரிப்பாளர்களை இவர் வீட்டு முன் க்யூ நிற்க வைத்தது. ஆனால் இதுவரை யார் படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை இவர். என்ன காரணம்?

எல்லோரும் ஒரே மாதி‌ரி கிளாமராக நடிக்கச் சொல்கிறார்களாம். இதனால் கேரளா பக்கம் கவனத்தை திருப்பியிருப்பவர், டி.கே. விஜயன் இயக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். மதூர் பண்டார்கர் இயக்கத்தில் தபு நடித்த சாந்தினி பார் படத்தின் ‌ரீ மேக்காம் இது.

மும்பை பார்களில் வேலை செய்யும் பெண்களை பற்றிய படம் சாந்தினி பார். கேரளா பார்களில் பெண்கள் வேலை பார்ப்பதில்லை. அப்படியிருக்கையில் சாந்தினி பாரை எப்படி மலையாளத்தில் ‌‌ரீ மேக் செய்ய முடியும் என்பது கேள்விக்குறி.

ஷகிலா தேசத்தில் சோனா எச்ச‌ரிக்கையாக இருப்பது நல்லது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ஜனநாயகன்’ ரிலீசுக்கு முட்டுக்கட்டை.. விஜய்யின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?

நாளை விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் இல்லை.. அதிரடியாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்..!

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

Show comments