சிம்ரனின் இரட்டை தீபாவளி!

Webdunia
செவ்வாய், 21 அக்டோபர் 2008 (19:28 IST)
யாருக்கும் இப்படியொரு கம் பேக் இருக்குமா? நிச்சயம் இருக்க முடியாது. சிம்ரனை பற்றிதான் சொல்கிறோம்.

தமிழில் யாரும் தொட முடியாத உயரத்தில் இருந்த சிம்ரன், திருமணம் செய்து கொண்டதும் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. அம்மா வேடத்துக்குகூட அழைக்க ஆளில்லை. இந்த நிலைமையிலும் சம்பளத்தையோ, தனது நிபந்தனைகளையோ மாற்றிக் கொள்ள சிம்ரன் தயாராக இல்லை.

இந்த பிடிவாதத்துக்கு கை மேல் பலன். ஹ‌ ரியின் சேவல், கௌதமின் வாரணம் ஆயிரம் என இரண்டு படங்களில் முக்கியமான வேடங்கள் தேடி வந்தன. ஆச்ச‌ரியமாக இந்த இரண்டு படங்களும் தீபாவளிக்கு திரைக்கு வருகின்றன.

வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா ஜோடியாக நடித்திருக்கும் சிம்ரனுக்கு பாடல் காட்சியும் இருக்கிறது. சேவலிலும் பரத்துடன் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார் சிம்ரன்.

செகண்ட் இன்னிங்ஸ் நடிகைக‌ள் பொறாமையில் பொசுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் ஆண் போட்டியாளரை மகனாக தத்தெடுக்க விரும்பும் சுசித்ரா.. காரணம் இதுதான்..!

தொடங்கிய 7 மாதத்தில் முடிவடையும் விஜய் டிவி தொடர்.. இதற்கு பதில் புதிய சீரியல் எது?

திரையரங்குகளில் ரிலீசாகும் அஜித்தின் ஆவணப்படம்.. ரிலீஸ் தேதி இதுவா?

Show comments