ஆ‌க்‍ஷனை விரும்பாத ரவிகிருஷ்ணா

Webdunia
சில்வண்டு நடிகர்களும் ஆ‌க்‍ஷன் ஹீரோ கனவுடன் திரிய, நமக்கு ஆ‌க்‍ஷன் சரிவராது என்று மழைக்கு ஒதுங்குவது போல் ஒதுங்கிப் போகிறார் ரவிகிருஷ்ணா. ஏன்?

கேள்வியுடன் பார்க்கப் போனால், இறகாக இளைத்துப் போயிருந்தார். சொந்தமாக உருவாக்கிய ஜிம்மில் கணிசமான நேரம் செலவு செய்ததால் எக்ஸ்ட்ரா சதை குறைந்து ஜம்மென்றிருந்தார்.

நேற்று இன்று நாளை படம் தமிழைப் போலவே தெலுங்கிலும் நல்லா போய்கிட்டிருக்கு என்றவர், அடுத்து வரயிருக்கும் இளங்கண்ணனின் காதல்னா சும்மா இல்லை படத்தின் சில காட்சிகளை போட்டுக் காண்பித்தார். படம் தெலுங்கு ரீ-மேக்காம்.

ஜிம்மில் பொழுதை கழிப்பவர் ஆ‌க்‍ஷன் படத்தை தட்டிக் கழிப்பது ஏன் என்று கேட்டதற்கு, நமக்கு ஆ‌க்‍ஷனுக்குரிய முகமும், உடம்பும் இல்லையே சார் என்றார்.

ரவி கிருஷ்ணாவுக்கு புரிந்த உண்மை ஏன் வேறு சிலருக்கு புரியவில்லை என்பது புரியாத புதிர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

மங்காத்தா முன் ‘திரெளபதி 2’ நிற்க முடியவில்லை: ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மோகன் ஜி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Show comments