முரட்டுகாளையில் சுமன்!

Webdunia
வியாழன், 16 அக்டோபர் 2008 (15:29 IST)
ரஜினியின் முரட்டுகாளை ரீ மேக்கில் சுந்தர் சி. நடிப்பது தெரியும். இதில் யாரை வில்லனாக போடுவது என்பதில் குழப்பம்.

முரட்டுகாளையை ஏவிஎம் தயாரித்த போது யாரை வில்லனாகப் போடுவது என்பது பெரிய பிரச்சனையாக இருந்தது. அந்த நேரம் ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார். அவரை எப்படி வில்லனாக நடிக்க கேட்பது என்று அனைவருக்கும் தயக்கம். இறுதியில் அவர் சம்மதிக்க வில்லன் கதாபாத்திரம் பிரமாதமாக பேசப்பட்டது.

புதிய முரட்டுகாளையிலும் வில்லன்தான் பிரச்சனை. முதலில் ராம்கியிடம் பேசியிருக்கிறார்கள். அவர் வில்லனாக நடிக்க மறுப்பு தெரிவித்ததால் தற்போது சுமனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூப்பர் கியூட்.. செம ஹாட்!.. லைக்ஸ்களை குவிக்கும் நயன்தாராவின் ரீசண்ட் கிளிக்ஸ்!..

நானும் ரவுடிதான் படத்தில் அனிருத் ஹீரோவா நடிக்கவேண்டியது!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

Leader: வசூலை குவிக்கும் லீடர்!. 3வது நாளில் வசூல் இவ்வளவு கோடியா?!...

தனுஷின் அன்பை இழந்தது பெரிய இழப்பு!.. சூழ்நிலை அப்படி!.. விக்னேஷ் சிவன் பேட்டி!...

முதல் நாளே மாஸ் வசூல்!.. லீடர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..

Show comments