தங்ககாசு மோசடி நிறுவனத்துடன் தொடர்பு இல்லை: ரம்யாகிருஷ்ணன்!

Webdunia
செவ்வாய், 14 அக்டோபர் 2008 (10:59 IST)
" தங்ககாசு மோசடி நிறுவனத்துடன், எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை'' என்று நடிகை ரம்யாகிருஷ்ணன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

சென்னையில் நடந்த 'கோல்டு குவெஸ்ட்' தங்க நாணய மோசடி வழக்கில் நடிகை ரம்யாகிருஷ்ணனுக்கு தொடர்பு உள்ளதா? என்று காவ‌ல்துறை‌யின‌ர ் விசாரித்து வருவதாக தகவல் வெ‌ளியானத ு.

இத‌ற்க ு மறு‌ப்ப ு தெ‌ரி‌வி‌த்த ு நடிகை ரம்யாகிருஷ்ணன் வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், " தங்ககாசு மோசடி வழக்கில் என்னை தொடர்புபடுத்தி வெளியான தகவல் தவறானது. அந்த தகவல் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதோடு மட்டுமல்லாமல், என் குடும்பத்தினர் மனதையும் பெரிதும் பாதிப்படைய வைத்துள்ளது.

இதுபோன்ற வதந்திகளை கண்டு கலங்காத, தைரியமான பெண்ணாக நான் இருந்தாலும், இந்த அவதூறான தகவல் என் மனதை மிகவும் காயப்படுத்தி உள்ளது. எனக்கும், அந்த தகவலில் குறிப்பிட்டுள்ளதற்கும் எந்த தொடர்பு‌ம ் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த 25 வருடங்களாக கலைத்துறையில் நான் கஷ்டப்பட்டு தக்க வைத்துள்ள நல்ல பெயரை இன்றுவரை காப்பாற்றி வருகிறேன். நான், கணவர், குழந்தைகளுடன் ஐதராபாத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். மோசடி செய்து பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை'' எ‌ன்ற ு ர‌ம்யா‌கிரு‌‌ஷ்ண‌ன ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் படத்தின் எடிட்டர் நீக்கம்!.. எடிட்டர் சங்கம் அதிரடி நடவடிக்கை...

ரஜினி படத்தில் வில்லனாக இயக்குனர் ஷங்கர்!.. தலைவர் 173 அப்டேட்...

திரையரங்குகளில் மீண்டும் தளபதி vs தல மோதல்: இன்று ரீ-ரிலீஸாகும் சிவகாசி மற்றும் அமர்களம்

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

Show comments