Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிப்-பில் சினிமா!

Webdunia
திங்கள், 13 அக்டோபர் 2008 (16:14 IST)
பிலிம் ரோலை மெகா சைஸ் பெட்டியில் வைத்து தூக்க முடியாமல் கொண்டு செல்லும் இந்த கால‌த்‌தி‌ல் விரல் சைஸ் சிப்பை காண்பித்து இதில் ஒரு சினிமாவை வைக்கலாம் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா.

ஆனால், உண்மை. ஆறரை லட்சத்தில் அந்தியூர் என்ற படத்தை எடுத்து அதனை சின்ன சிப்-புக்குள் வைத்திருக்கிறார் இன்சைட் மீடியா நாக் ரவி. இவரது கம்பெனி தயாரித்திருக்கும் ஹெட் போனில் ஐயாயிரம் வரை பாடல்களை சேமித்து வைக்கலாமாம்.

படங்களை விநியோகித்து வரும் நாக் ரவி விரைவில் தமிழ்நாடு முழுவதும் இன்சைட் ரீடெயில் கடைகளை திறக்க இருக்கிறாராம். இந்த கடைகளில் ஒரு பாடலை இரண்டு ருபாய்க்கு பதிவு செய்து கொள்ளலாம். ஒரு படத்தை பதிவு செய்வதென்றால் வெறும் ஐந்து ருபாய் கொடுத்தால் போதும்.

நாக் ரவியின் இந்த அதிரடி திட்டங்களை‌ப் பார்த்த இயக்குன‌ர் பாரதிராஜா அவருக்கு அளித்த பட்டம், தமிழ் நாட்டின் பில்கேட்ஸ்.

நாக் ரவிக்கு பொருத்தமான பட்டம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

160 கோடி ரூபாய் பட்ஜெட்.. வசூல் 50 கோடிதான்… அப்செட்டில் அட்லி!

கலர்ஃபுல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

பா விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன் நடிக்கும் ‘அகத்தியா’ .. கவனம் ஈர்க்கும் மிரட்டலான டிசர்!

சசிகுமார் & சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Show comments