ஹீரோவாகும் பிரபுதேவா!

Webdunia
திங்கள், 6 அக்டோபர் 2008 (14:12 IST)
வில்லு படத்தை இயக்கிவரும் பிரபுதேவா மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார்.

நடிப்பு கை கொடுக்காமல்தான் படம் இயக்குவதில் கவனம் செலுத்தினார் பிரபுதேவா. அதிர்ஷ்டவசமாக அவர் இயக்கிய படங்கள் பெ‌ரிய வெற்றியை பெற்றன. ஆனாலும் நடிகராக ஜெயிக்க வேண்டும் என்ற வெறி அவருள் இன்னும் கனன்று கொண்டேதான் இருக்கிறது.

அதை விசிறி விடுவது போல் ஒரு வாய்ப்பு வந்துள்ளது. பிரபுதேவாவை வைத்து அலாவுதீன் படத்தை இயக்கிய ரவி சக்ரவர்த்தி கூறிய கதை பிரபுதேவாவுக்கு பிடித்திருக்கிறது. வில்லு முடிந்த பிறகு ரவியின் இயக்கத்தில் நடிக்கயிருக்கிறார்.

இதுதவிர தங்கர்பச்சானின் புதிய படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது. இதனால் சிறிது நாட்களுக்கு படம் இயக்குவதை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளார் பிரபுதேவா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜாவின் தற்போதைய நிலைமை!.. வெளியான புகைப்படம்!.. ரசிகர்கள் அதிர்ச்சி..

இளமை திரும்புதே!.. மம்முட்டியின் இளமைக்கு ரகசியம் இதுதான்!..

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

Show comments