Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சக்கர‌க்கட்டிக்கு யு

Webdunia
வியாழன், 25 செப்டம்பர் 2008 (15:19 IST)
தாணு தய ா‌ ரிப்பில் அவரது மகன் இயக்கியிருக்கும் சக்கர‌க்கட்டி நாளை வெளியாகிறது.

பாக்யரா‌ஜின் மகன் சாந்தனு இதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் நடித்திருக்கும் இப்படத்தின் ஒரே பழகிய முகம் ஏ.ஆர். ரஹ்மான். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான்தான் இசையமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் தாணுவின் மகனும் இயக்குனருமான கலாபிரபு.

நான் இசையமைப்பது என்றால் பல மாதங்கள காத்திருக்க வேண்டிவரும் என்று இசைப் புயல் கூறியதையும் ஏற்றுக் கொண்டார் கலாபிரபு. சக்கர‌க்கட்டி படம் தயாராகியும் வெளியாவதில் தாமதமாக இதுவே காரணம். தரமான பாடலுக்கு எத்தனை நாள் வேண்டுமானாலும் காத்திருக்கலாம்தானே.

சக்கர‌க்கட்டிக்கு தற்போது விலாசமாக இருப்பதே இசைப்புயலின் பாடல்கள்தான். ‌சில நாட்கள் முன் வெளியான இப்பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்புகின்றன.

குறிப்பாக டாக்ஸி டாக்ஸி பாடல். இந்தப் பாடலின் பாப்புல ா‌ ரிட்டியைப் பார்த்து இதனை மட்டும் ‌‌ர ீ- ஷூட் செய்துள்ளார்கள். ஒரு பாடல் முழுக்க கிராஃபிக்ஸ் செய்துள்ளது இன்னொரு ஹைலைட்.

நாளை வெளியாகும் இப்படத்திற்கு சென்சார் யு சான்றித‌ழ் அளித்துள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments