அஜித்-விஜய் 50-50

Webdunia
புதன், 17 செப்டம்பர் 2008 (18:18 IST)
அஜித்தும்-விஜயும் அடுத்தடுத்து நடிக்கப் போகும் படங்கள் ஐம்பதாவது படங்கள் என்பதால் அவரவரின் ரசிகர் மன்றத்தினர் பரபரப்பாகிவிட்டார்கள்.

பிரபுதேவா இயக்கிக் கொண்டிருக்கும் படமான 'வில்லு' விஜயின் 49வது படம். ஐம்பதாவது படத்தை யார் இயக்கப் போவது என்ற போட்டியில் ஜெயித்திருப்பது எஸ்.ஏ. சந்திரசேகரன்.

விஜயின் ஐம்பதாவது படத்துக்கான அதிரடியான கமர்ஷியல் கதையை எப்போதே ரெடி செய்து வைத்துவிட்டேன். தலைப்பு 'வேட்டைக்காரன்'. இது ஏற்கனவே எம்.ஜி.ஆர். படத்தலைப்பு. விஜய்காக தேர்வு செய்தேன் என்கிறார்.

அதேபோல், தற்போது அஜித் நடிக்கும் ஏகன் படம் 48வது படம். இதையடுத்து சிவாஜி புரொடக்சன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அடுத்ததாக 50வது படத்தை இயக்கப் போவது யார் என்றும், தயாரிக்கும் பேனர் பற்றியும் விரைவில் வெளிவர வருகிறது.

இதற்கிடையில் ஐம்பதாவது படமாக இந்தியில் சய ீ ஃப் அலிகான் நடித்து வெற்றி பெற்ற 'ரேஸ்' படத்தை தமிழில் எடுக்கவும், அஜித் நடிக்கவும் விஜய் அமிர்தராஜ் கேட்க, ஐம்பதாவது படம் ரீ-மேக் இல்லாத படத்தில்தான் நடிக்க வேண்டுமென்கிற தன் விருப்பத்தை 'தல' சொல்ல, 51வது படமாக ரேஸ் தயாராக உள்ளது.

இரண்டு முன்னணி ஹீரோக்களின் ஐம்பதாவது படமென்றால் சரவெடிதான். கலக்குங்க...
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இப்பதான் தெரியுது.. ஏன் விஜய் அமைதியா இருக்காருனு? ஜனநாயகனில் திடீர் திருப்பம்

ஜனநாயகன் சென்சார் பஞ்சாயத்து!.. வழக்கு போட சொன்னதே விஜய்தானா?!...

நடிகராக களமிறங்கும் தனுஷ் மகன்!.. டைரக்டர் யார் தெரியுமா?..

சுயசரிதியை எழுத துவங்கியிருக்கும் ரஜினி!.. சௌந்தர்யா கொடுத்த அப்டேட்!...

அதிக சம்பளம் வாங்கினா பெரிய ஹீரோவா?!.. ரஜினி, விஜயை அட்டாக் பண்ணும் ராதாரவி...

Show comments