முடிவை மாற்றிய தெலுங்கு நடிகை!

Webdunia
புதன், 17 செப்டம்பர் 2008 (18:10 IST)
தெலுங்கில் தற்போது 'நம்பர் ஒன்' நாயகி என்று பெயரெடுத்திருப்பவர் இலியானா. தமிழில் இவர் நடித்த ஒன்றிரண்டு படங்கள் ஓடாததாலும், ராசியில்லாத நடிகை என்ற முத்திரை குத்தப்பட்டதாலும் தமிழே வேண்டாம் என்று தெலுங்குக்கு போனவர் இன்று ஒன்றரைக் கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.

அதே சம்பளம் கொடுத்து கூப்பிட்ட தமிழ் தயாரிப்பாளர்கள் சிலரிடம் தமிழ்ப் டெமென்றால் எவ்வளவு கொடுத்தாலும் வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார் இலியானா.

அதுமட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் செளந்தர்யா தான் இயக்கும் ரஜினியின் அனிமேஷன் படமான சுல்தான் தி வாரியரில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கக் கூப்பிட்டும் பிஸி, அது இது என்று காரணம் சொன்னார்.

அதன்பின் செளந்தர்யா ரஜினி இயக்கிய ஆடை விளம்பர மாடலாக பல லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்தார். அதனால் கொஞ்சம் கொஞ்சமாக தமிழில் நடிக்கக்கூடாது என்ற பிடிவாதத்தை தளர்த்த முடிவு செய்துள்ளார்.

சமீபத்தில் தெலுங்கில் 'ஆட்டா' என்ற படத்தில் சிந்தார்த்துக்கு ஜோடியாக நடித்தார். படம் நன்றாகப் போக, அதை தமிழில் டப் செய்து ரிலீஸ் செய்ய இருக்கின்றனர்.

படம் சுமாராக ஓடினால் தமிழில் நடிப்பதைப் பற்றி யோசிப்போம் என்றவர், கேட்கிற சம்பளம் கொடுத்தால்தான் அதுவும் ஒப்புக்கொள்ள முடியும் என்று கூறிவருகிறார். என்னவோ இவரைவிட்டால் நடிகையே இல்லாத மாதிரி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு.. நீதிமன்றம் தள்ளுபடி..!

Show comments