புதுப்புது மெட்டுக்கள்!

Webdunia
புதன், 17 செப்டம்பர் 2008 (18:05 IST)
இசையமைப்பாளர் மரியா மனோகர் 'நாயகன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர ். அதிரடியான பாடல்களாலும், அதிரவைக்கும் பின்னணி இசையாலும் தமிழ் சினிமாவை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார்.

பாடல்கள் அனைத்தும் ஹிட் என்றாலும் நிலா நிலா ஓடிவா பாடலும், இருந்தாக்க அள்ளிக்கொடு பாடலும் டி.வி. சேனல்களில் தூள் பண்ணிக் கொண்டிருக்கின்றன. முதல் படமே வெற்றிப் படமாக அமைந்ததால் வரிசையாக படங்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.

நாயகன் முதல் படம் என்றாலும் ஹிந்தியில் ஆல்பங்கள் வெளியிட்டிருக்கிறார் என்பதோடு, முறையாக சங்கீதம் பயின்றவர். அந்த சங்கீ த‌‌ ம்தான் எதுமாதிரியும் இல்லாமல் புது மாதிரியான மெட்டுக்கள் போட முடிந்தது என்கிறார்.

மேலும், தற்போது 'நாலும் தெரிஞ்ச ரெண்டு பேர்' எஸ்.ஏ.சி. ராம்கி இயக்கும் படத்தில் ஹிப்பாப் பாடலை மெட்டமைத்துக் கொண்டிருக்கிறார். இடையிடையே பேசிக்கொண்டு பாடுவதற்குப் பெயர்தான் ஹிப்பாப் பாடலாம்.

தற்போது ஒவ்வொரு படங்களிலும் ஒர ரீமிக்ஸ் பாடல் இடம்பெறுகிறது. அதில் எனக்கு ஆர்வமில்லை. இயக்குனர்கள் கேட்டால் மட்டுமே போட்டுக் கொடுப்பேன் எனும் இவர், தெலுங்கு ரீமேக்கான 'அங்குசம்' சரவணன் நடிக்கும் 'கவசம்' போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இப்படத்தை பி. வாசு உதவியாளர் இயக்குகிறார். அசத்துங்க மரியா மனோகர் சார்... மறுபடியும் உங்களைப் பத்தி பேசவைங்க.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ஜனநாயகன்’ ரிலீசுக்கு முட்டுக்கட்டை.. விஜய்யின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?

நாளை விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் இல்லை.. அதிரடியாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்..!

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

Show comments