'ஏய்' 'வாடா'!

Webdunia
செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (18:00 IST)
இனி புது ஹீரோக்களை வைத்து படங்களை இயக்குவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் இயக்குனர் ஏ. வெங்கடேஷ். இவரை இப்படி முடிவெடுக்க வைத்த படம் 'சிங்கக்குட்டி'.

நடிகர் திலகம் சிவாஜியின் மகன் ராம்குமாரின் வாரிசை வைத்து படம் எடுக்க, படம் சரியான அடி. வெங்கடேஷ் மிகப்பெரிய ஹிட் படம் கொடுக்காவிட்டாலும், தயாரிப்பாளர ை‌க ் காப்பாற்றும் இயக்குனம் என்று பெயரெடுத்திருப்பவர்.

தற்போது அர்ஜுனை வைத்து இயக்கிய 'துரை' படம் ரிலீஸாக உள்ள நிலையில்... 'வாடா' என்ற படத்தை சுந்தர் சி-யை வைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார்.

வித்தியாசமான படம் எடுப்பவர் என்பதோடு, இப்படி 'ஏய்', 'வாடா' என்று பெயர் வைப்பதிலும் கில்லாடியாக இருக்கிறார். சரத்குமார் நடித்த 'ஏய்' படத்தில் ஏய் என்று கூப்பிடுவதால் என்ன நடக்கிறதோ அதேபோல 'வாடா' என்று கூப்பிடுகிற ஒரு வார்த்தையில்தான் படத்தின் கதையே இருக்கிறதாம்.

கதை, படத்தின் பெயர் எப்படி இருந்தாலும், இரண்டரை மணி நேரம் தியேட்டரில் உட்கார வைத்து ரசிக்க வைப்பதற்காக பாராட்டலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்காளி சீனிவாசன் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!..

3 வேளை சோத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு!" - யோகி பாபுவிடம் எமோஷனலான விஜய்!

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

Show comments