அடிதடியில் வாசன் கார்த்திக்

Webdunia
செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (17:17 IST)
தனது சங்கரா படத்துக்கு ஒரு முரட்டுத்தனமான, ஆஜானுபாகுவான ஹீரோ வேண்டும் என்று சில மாதங்கள் காத்திருந்தார் 'நெஞ்சைத் தொடு' இயக்குனர் ராஜ்கண்ணன்.

இதற்காக தெலுங்கு, கன்னட இளம் ஹீரோக்களையும் அலசிப் பார்த்தார். ஆனால் யாரும் செட்டாகவில்லை. இறுதியாக 'மிருகம்' படத்தில் நடித்த ஆதியை போடலாம் என்று முடிவு செய்தார்.

ஆனால், மிருகம் படத்திலும் அதேபோன்ற கெட்டப்பில் நடித்ததால் அதே சாயல் தன் படத்துக்கும் வந்துவிடும் என்பதால்... அவரை நடிக்க வைக்கும் முடிவை மாற்றினார்.

அப்போதுதான்... வாசன் கார்த்திக ். ' மாமதுரை' படத்தில் நடித்தவரின் 'அய்யன்' பட ஸ்டில்ஸ் படத்திரிக்கையில் வர, முதலில் இவர் வாசன் கார்த்திக் என்று நம்பவே இல்லையாம் ராஜ்கண்ணன்.

அவ்வளவு முரட்டுத்தனமாகவும், கட்டுமஸ்தாகவும் உடலை ஏற்றியிருக்க, இவர்தான் தன் 'சங்கரா' படத்தின் நாயகன் என்று முடிவு செய்து உடனே சென்று அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.

இதன்படி தற்போது போரூர், வளசரவாக்கம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ராஜ்கண்ணன் இயக்கிய முதல் படமான 'நெஞ்சைத் தொடு' எதிர்பார்த்த வெற்றி பெறாவிட்டாலும், இந்தப் படத்தை இரண்டுக்குமான வெற்றிப்படமாக்க உழைத்து வருகிறது இவரது டீம். அசத்துங்க சார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏஆர் ரஹ்மான் சிறுபான்மையினர்.. ஜிவி பிரகாஷ் பெரும்பான்மையினரா? சீமான் கேள்வி

ஜனநாயகனுக்கு தேதி குறிச்சாச்சு! இந்த முறையாவது சொன்ன தேதியில் சாட்டைய வீசுவாரா?

பல்சரில் ஆவியா? ‘கருப்பு பல்சர்’ படம் எப்படி இருக்கிறது? இதோ விமர்சனம்

கல்கி 2 திரைப்படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. அவருக்கு பதில் தமிழ் நடிகையா?

ரஜினி - கமல் படத்தில் இணையும் பிரபலம்!.. அப்ப வேறலெவல்ல இருக்கும்!..

Show comments