அஜித்துக்கு தூது!

Webdunia
திங்கள், 15 செப்டம்பர் 2008 (13:58 IST)
அஜித்தின் மைத்துனரும், நடிகை ஷாலினியின் அண்ணனுமான ரிச்சர்ட் அந்த பெயர் ராசியில்லை என்று தற்போது ரிஷி என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார்.

கடைசியாக நாளை என்ற படத்தில் நடித்தார். அதுவும் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை. அதனால் அதிரடியாக ஒரு முடிவு எடுத்திருக்கிறார்.

அதாவது இப்போதுள்ள பெரிய ஹீரோக்கள் படத்தில் நடித்தால் மக்கள் மனதில் பதியும் என்பதோடு, படங்களும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தனது மாப்பிள்ளையான அஜித்துக்கு ஷாலினி மூலம் இருவரும் சேர்ந்து நடிக்கும் விருப்பத்தை சொல்லியிருக்கிறார்.

அதை பொருமையாக கேட்டுக் கொண்ட அஜித் இப்போது வேண்டாம் இன்னும் கொஞ்ச நாட்கள் போகட்டும் என்று சொல்ல, குஷியாகிவிட்டார் ரிஷி.

எப்படியும் அஜித் தன்னுடன் நடிப்பார் என்று உறுதியாகத் தெரிந்துவிடவே... இரண்டு ஹீரோக்கள் கதைகளாகத் தேடி வருகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இப்பதான் தெரியுது.. ஏன் விஜய் அமைதியா இருக்காருனு? ஜனநாயகனில் திடீர் திருப்பம்

ஜனநாயகன் சென்சார் பஞ்சாயத்து!.. வழக்கு போட சொன்னதே விஜய்தானா?!...

நடிகராக களமிறங்கும் தனுஷ் மகன்!.. டைரக்டர் யார் தெரியுமா?..

சுயசரிதியை எழுத துவங்கியிருக்கும் ரஜினி!.. சௌந்தர்யா கொடுத்த அப்டேட்!...

அதிக சம்பளம் வாங்கினா பெரிய ஹீரோவா?!.. ரஜினி, விஜயை அட்டாக் பண்ணும் ராதாரவி...

Show comments