பாவலர் குடும்பத்தின் வாரிசு!

Webdunia
சனி, 13 செப்டம்பர் 2008 (16:46 IST)
அப்பாடா என்று வியக்க வைக்கிறது இசைஞானி இளையராஜா அவர்களின் சாதனை. இதோ பத்து வருடத்துக்கு முன்தான் அவரின் முதல்படமான அன்னக்கிளி வந்ததுபோல் இருக்கிறது. ஆனால் தனது இசையில் 875வது படத்தைத் தொட இருக்கிறார்.

ப்ரண்ட்ஸ் ப்யூச்சர் பிலிம்ஸ் சார்பாக ஷாகீர் தயாரிக்கும் படம் விளையாடு ராஜா விளையாடு. படப்பெயர்தான் தெலுங்கு டப்பிங் படம்போல் இருந்தாலும் இது நேரடி தமிழ்ப் படம்தான்.

இயக்குனர் வேறு யாருமல்ல இசைஞானியின் அண்ணன் பாவலர் வரதராஜன் மகன் ஜோ. வரதராஜன்தான். அடுத்தவர் படங்களுக்கே இசையால் உயிர் கொடுக்கும் ராஜா, இந்தப் படத்திற்கு நிறைய நாட்கள் எடுத்துக்கொண்டு மீண்டும் ராஜபாட்டை நடத்தவிருக்கிறார்.

875 என்ன... ஆயிரம் படத்தை தொடவேண்டும் என்பதுதான் லட்சோப லட்சம் ரசிகர்களின் அன்பு வேண்டுகோள், ஆசை எல்லாமே.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் ஆண் போட்டியாளரை மகனாக தத்தெடுக்க விரும்பும் சுசித்ரா.. காரணம் இதுதான்..!

தொடங்கிய 7 மாதத்தில் முடிவடையும் விஜய் டிவி தொடர்.. இதற்கு பதில் புதிய சீரியல் எது?

திரையரங்குகளில் ரிலீசாகும் அஜித்தின் ஆவணப்படம்.. ரிலீஸ் தேதி இதுவா?

Show comments