வில்லி சென்டிமெண்ட்!

Webdunia
சனி, 13 செப்டம்பர் 2008 (16:31 IST)
ஹீரோ வில்லியோடு மோதும் படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றிருக்கிறது. உதாரணத்திற்கு தூள் படத்தில் சொர்ணாக்கா, திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டி, சந்திரமுகியில் ஜோதிகா அப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்த வரிசையில் தற்போது வில்லியோடு மோதப்போகும் ஹீரோ பரத். வில்லி ரம்யா கிருஷ்ணன், படம் ஆறுமுகம். இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.

கொஞ்சம் இடைவெளிக்குப் பின் இயக்கும் படம். அதுபோல ரம்யா கிருஷ்ணனும் நீண்ட நாளைக்குப் பின் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார்.

பார்க்கும்போதே ஒரு பயத்தை உண்டு பண்ணவேண்டும். அப்படிப்பட்ட ஒரு வில்லியைத் தேடிக் கொண்டிருந்த போதுதான் ரம்யா ஞாபகத்துக்கு வர, உடனே அணுக அவரும் கதை கேட்டவுடன் ஒப்புக்கொண்டார்.

இதுவும் படையப்பா போல ப்ரேக் கிடைக்கும். மீண்டும் ஒரு ரவுண்ட் வரலாம் என்றிருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். பார்க்கலாம்... பார்க்கலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘பருத்திவீரன்’ படத்தில் நடித்து பாட்டு பாடிய நாட்டுப்புற பாடகி காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

குலதெய்வ கோயிலில் மகளுடன் சாமி வழிபாடு செய்த அஜீத்.. வைரலாகும் புகைப்படம்..!

பிக்பாஸ் ஆண் போட்டியாளரை மகனாக தத்தெடுக்க விரும்பும் சுசித்ரா.. காரணம் இதுதான்..!

Show comments