பூ பாடல் வெளியீட்டு விழா!

Webdunia
சனி, 13 செப்டம்பர் 2008 (16:25 IST)
சொல்லாமலே, ரோஜா கூட்டம், டிஸ்யூம் போன்ற படங்களை இயக்கியவர் சசி. இவர் தற்போது பூ என்ற படத்தை இயக்கி வருகிறார். மோசர் பேர் கம்பெனியோடு நேசகி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சத்யம் காம்ப்ளக்ஸில் நடைபெற்றது.

எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதிய 'வெயிலோடு போய்' என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம்தான் பூ. என் மற்றப் படங்களைத் தாண்டியும் இது புதுமையாக இருக்கும் என்றார் இயக்குனர் சசி.

இப்பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் பாலுமகேந்திரா, பாலாஜி சக்திவேல், அமீர், சுப்ரமணிய சிவா, மிஷ்கின், வஸந்த் மற்றும் எழுத்தாளர்கள் வண்ணதாசன், எஸ், ராமகிருஷ்ணன், தமிழ்ச்செல்வன், இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, எஸ்.எஸ். குமரன் மற்றும் ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினர்.

பட வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். சரி மிகவும் நம்பிக் கொண்டிருக்கும் படம் இது என்பதால், பெரும் வெற்றிப்படமாக அமைந்தால் நல்லது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடுமையான கோடை வெப்பத்தை தணிக்க மருத்துவரின் 6 முக்கியமான ஆலோசனைகள்!

10 ஆண்டு திட்டமிட்டு வடகொரியாவில் இருந்து தப்பித்த குடும்பம்.. தென்கொரியாவில் தஞ்சம்..!

H-1B விசாக்களுக்கு 3 ஆண்டுகள் தடை? அமெரிக்காவில் அறிமுகமான புதிய மசோதாவால் இந்தியர்களுக்கு பாதிப்பு?

CUET PG 2026 முடிவுகள் வெளியீடு: மதிப்பெண் பட்டியலை டவுன்லோடு செய்வது எப்படி?

ஜனநாயகன் படத்தின் எடிட்டர் நீக்கம்!.. எடிட்டர் சங்கம் அதிரடி நடவடிக்கை...

Show comments