உதயமானது சன் பிக்சர்ஸ்!

Webdunia
புதன், 10 செப்டம்பர் 2008 (20:11 IST)
இருபத்தியிரண்டு சானல்கள், நாற்பது வானொலி நிலையங்கள்... பிரமாண்டமாக கிளை பரப்பி நிற்கும் சன் நெட்வொர்க்கின் புதிய வரவு, சன் பிக்சர்ஸ். தென்னிந்திய மொழி திரைப்படங்களை தயாரிப்பதற்கான தயாரிப்பு நிறுவனம்!

இதன் தொடக்க விழாவில் சுந்தர் சி. ஸ்ரீகாந்த், ஜீவா, நகுல், இயக்குனர் ஜீவா, தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசன் என பலர் கலந்து கொண்டனர்.

காதலில் விழுந்தேன் படத்தின் விநியோக உரிமையை விற்பது குறித்து பேச சன் தொலைக்காட்சிக்கு போயிருக்கிறார் அதன் இயக்குனர் ராஜா. அப்போது எழுந்த பேச்சுவார்த்தையே சன் பிக்சர்ஸ் தொடங்க பிள்ளையார் சுழியாக அமைந்தது என தனது அனுபவத்தை விவரித்தார் ராஜா.

தன்னுடைய படங்கள் ஓடுவதற்கு சன் தொலைக்காட்சியும் ஒரு காரணம் என்றார் சுந்தர் சி. அதனை வழிமொழிந்தார் ஜீவா.

காதலில் விழுந்தேன், தீ, தெனாவட்டு, சிவா மனசுல சக்தி, பூக்கடை ரவி ஆகிய படங்களின் ஒட்டுமொத்த விநியோக உரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. நான்கு தென்னிந்திய மொழிகளிலும் படங்களை தயாரிக்க இருக்கிறார்களாம். மாதத்திற்கு ஒரு படம் என்பதே இலக்கு என்று அவர்கள் சொன்னபோது கண்ணை கட்டியது நமக்கு.

சின்னத்திரையில் சாதித்தவர்கள் பெரிய திரையிலும் சாதிப்பார்கள்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

ஆஸ்கார் விருதுக்கான பரிசீலனை பட்டியலில் ‘டூரிஸ்ட் பேமிலி’.. படக்குழு மகிழ்ச்சி..!

ஜனநாயகன்' திரைப்படத்திற்கு சான்றிதழ்.. தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணை எப்போது?

தணிக்கை சான்றிதழ் கையில் கிடைக்கும் வரை ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டாம்: தனஞ்செயன்

Show comments