ஹீரோ பஞ்சத்தில் சினேகா படம்!

Webdunia
புதன், 10 செப்டம்பர் 2008 (20:04 IST)
ஹீரோயின் ஓரியண்ட் படங்களுக்கு இது ஒரு சிக்கல். வில்லன்களை உதைப்பது முதல் நீதியை நிலைநாட்டுவது வரை எல்லா வேலைகளையும் ஹீரோயின்கள் பார்த்துக் கொண்டாலும் பக்கவாத்தியமாக ஒரு டம்மி ஹீரோ தேவை. இதற்கென்றே ராஜா மாதிரியான நடிகர்களை 'வளர்த்து' வந்தது திரையுலகம். இப்போது டம்மிகளுக்கு பஞ்சம்.

வைஜெயந்தி ஐ.பி.எஸ்.ஸின் ரீ-மேக்கான பவானியில் காக்கி சட்டையில் வில்லன்களை குமுறி எடுக்க இருக்கிறார் சினேகா. அவரது ஆ‌க் சனை அருகிலிருந்து வேடிக்கை பார்க்க ஒரு ஹீரோ தேவை.

தமிழில் நேற்று முளைத்த நடிகரும் முஷ்டி மடக்கி முன்னூறு பேரை ஒரே அடியில் நொறுக்கிக் கொண்டிருப்பதால், வேடிக்கை பார்க்கும் ஹீரோவுக்கு கடும் பஞ்சம். இதனால் பவானியில் இயக்குனர் ஆர்த்திகுமார் வலையை கேரளா பக்கம் வீசியிருக்கிறார். டம்பி சிக்கினாலும் சிக்கலாம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!

விஜய் சேதுபதி நடிப்பில் முத்து என்கிற காட்டான் - விமர்சனம்

Show comments