Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் அக்டோபர் சந்திப்பு!

Webdunia
செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (20:39 IST)
மழை விட்டும் தூறல் விடவில்லை. அமெரிக்காவில் இருக்கும் ரஜினியை சுழற்றி அடிக்கிறது, அவரது ரசிகர்கள் கிளப்பியிருக்கும் சுறாவளி.

விஜயகாந்த், சரத்குமார் என்று சுற்றியுள்ள ரசிகர்கள் பிரியாணி சாப்பிட எத்தனை நாளைக்கு பத்திய சோறு சாப்பிடுவது... தொடங்குங்கள் தலைவா அரசியல் கட்சி என்று ரஜினி ரசிகர்கள் புழுங்கத் தொடங்கி நிறைய நாள் ஆகிறது.

சிரஞ்சீவி கட்சி தொடங்கியதும் புழுக்கம் புயலாக மாறி, ரசிகர்களை மன்ற தலைவர் சத்யநாராயணனிடம் சண்டையிட வைத்தது. தலைவரை பார்த்தால்தான் ஆயிற்று என்று பன்னிரெண்டு மாவட்ட மன்ற நிர்வாகிகள் அடம்பிடிக்க, ரஜினியிடம் போனில் தகவலை சொல்லியிருக்கிறார் சத்யநாராயணா.

பிரச்சனையின் வீரியம் புரிந்த ரஜினியும் அமெரிக்க படப்பிடிப்பை முடித்த பின் அக்டோபரின் ரசிகர்களை சந்தித்து பேசுவதாக போனில் வாக்குறுதி அளித்துள்ளார். அதற்குப் பிறகே சமாதானமாகியிருக்கிறார்கள் மன்ற நிர்வாகிகள்.

ரஜினி ரசிகர்களை சந்திக்கும் நாளில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தெரிந்துவிடும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

Show comments