செப். 19 பந்தயம் வெளியீடு!

Webdunia
செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (17:53 IST)
வி.வி. கிரியேஷன்ஸ், இத்தேஷ் ஜெபக் தயாரித்திருக்கும் பந்தயம் செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகிறது.

விஜயின் கெளரவ தோற்றம், சுராங்கனி ரீ-மிக்ஸ், மேக்னா நாயுடுவின் ஆட்டம் என்று பந்தயம் பக்குவமாக சமைக்கப்பட்டிருக்கிறது. விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கின்றன.

ஒரு படத்தின் வெற்றியில் ஐம்பது சதவீதம் பாடல்களுக்கு உண்டு என்று கூறி இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை ஐஸ் மழையில் நனைத்தார் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன்.

நிதின் சத்யா தனி ஹீரோவாக நடிக்கும் முதல் படம். படத்தில் இவர் மோதுவது பிரகாஷ் ராஜுடன். ரொம்ப எதிர்பார்க்கிறேன் சார் என்றார் ஆவர் பீறிடும் குரலில்.

நிதின் சத்யா ஜோடியாக சிந்து துலானி. ஏறக்குறைய ஒன்றரை வருடங்களுக்குப் பின் துலானி நடிக்கும் தமிழ்ப் படம்.

ஒட்டுமொத்த யூனிட்டுக்கும் இது வாழ்வா, சாவா பந்தயம். 19 ஆம் தேதி தெரிந்துவிடும் பந்தயத்தின் வெற்றியும் தோல்வியும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பராசக்தி வசூலை வெளியிட்ட தயாரிப்பாளர்!... வச்சி செய்யும் விஜய் ஃபேன்ஸ்!...

பிரபலங்களை கார் ரேஸுக்கு கூப்பிடுவதே அஜித்தான்!.. என்னப்பா சொல்றீங்க?!..

துபாயில் ஆடம்பர பங்களா வாங்கியுள்ள நயன்தாரா - விக்னேஷ் சிவன்!..

லவ் ஸ்டோரி பற்றி கேட்ட ரஜினி! ‘பராசக்தி’ பட கேப்புல விளையாடிருக்கிறாரே

ஜனநாயகன் தீர்ப்பு ஒத்திவைப்பு!.. படம் வருமா? வராதா?.. விஜய் ரசிகர்கள் சோகம்!..

Show comments