அண்ணன் அப்படி தம்பி இப்படி!

Webdunia
பூவா தலையா பாடல் வெளியீட்டு விழாவில், படத்தின் நாயகன் உதயாவின் பேச்சு அனைவரையும் உலுக்கிவிட்டது. தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் இளைய மகனான இவர்,

" என்னையும், அருண் விஜயையும் போன்றவர்களுக்கு சினிமா பின்னணி இருந்தாலும் திறமை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். அதனால் எங்களுக்கும் வாய்ப்பு தாருங்கள். நல்ல படம் என்றால் சம்பளம் வாங்காமலே நடிக்கிறேன்" என்றார் நா தழுதழுக்க.

இவர் இப்படியென்றால் இவரது அண்ணன், கிரீடம் படத்தை இயக்கிய விஜய் நிற்க நேரமின்றி பறக்கிறார். செப். 12 இவர் இயக்கிய பொ‌ய் சொல்லப் போறோம் வெளியாகிறது.

ப்ரியதர்ஷன் சிஷ்யன் என்பதால் அவர் மூலமாக அடுத்து இந்தியில் ஒரு படம் இயக்குகிறார். அத்துடன் தமிழில் படம் இயக்க இளம் ஹீரோக்களிடம் கதை சொல்லி வருகிறார்.

கோலிவுட்டில் இயக்குனர் ராஜா, செல்வராகவன், ஜோதி கிருஷ்ணா என நீண்டதொரு இயக்குனர் பட்டியல் தம்பிக்குப் பிறகுதான் மற்றவர்கள் என்று இயங்கி வருகிறது. விஜய் மட்டும் விதிவிலக்கு.

ஏனிந்த ஓரவஞ்சனை பிரதர்?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"சங்கராந்தி வைப்ஸ்".. கணவருடன் சமந்தாவின் புகைப்படம் வைரல்..!

சூர்யாவுக்கு ஜோடி ஸ்ரீலீலா கிடையாது.. ‘புறநானூறு’ நடந்திருந்தா ஹீரோயின் யார் தெரியுமா?

படப்பிடிப்பு தொடங்கும் முன்பே நெட்பிளிக்ஸ் வாங்கிய தனுஷ் படம்.. எத்தனை கோடி?

இப்படி ஒரு விளம்பரத்தில் நடிக்கலாமா?!.. அஜித்துக்கு கடும் எதிர்ப்பு!...

குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய சிவகார்த்திகேயன்!... வைரல் புகைப்படங்கள்...

Show comments