அள்ளிக் கொடுத்த ஜே.கே. ரித்தீஷ்!

Webdunia
இருந்தாக்கா அள்ளிக்கொடு, இல்லாட்டி சொல்லிக்கொடு... நாயகன் படப்பாடல். நாயகன் ஹீரோ ரித்தீஷுக்கு இருக்கிறது. கணக்குப் பார்க்காமல் அள்ளிக் கொடுக்கிறார்.

ரித்தீஷின் விளம்பர அலப்பரையை விதவிதமாக பெயிண்ட் அடித்து ஊடகங்கள் கிண்டலித்தாலும், அவர் செய்யும் நல்ல காரியங்கள் பல நேரம் இதயத்தில் ஈரம் கசிய வைப்பவை.

பத்திரிக்கையில் யாரேனும் கஷ்டப்படுவதாக செய்தி வந்தால், இஷ்டப்பட்டு உதவி செய்கிறவர் இவர். அப்படிதான் மாருதி என்ற படத்தை இயக்கிய தியாகராஜனை பற்றி கேள்விப்பட்டிருக்கிறார் ரித்தீஷ். ஒரு காலத்தில் இயக்குனராக வலம் வந்தவர் இப்போது மனநிலை சரியில்லாமல் ஊர் ஊராக சுற்றி வருகிறார்.

இதனை கேள்விப்பட்டதும் தியாகராஜனின் சிகிச்சைக்காக ஐம்பதாயிரம் ரூபாயை அவரது மனைவியிடம் அளித்துள்ளார் ரித்தீஷ். சிகிச்சைக்கு இன்னும் பணம் தேவைப்பட்டால் அதையும் தருவதாக உறுதியளித்துள்ளாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படப்பிடிப்பு தொடங்கும் முன்பே நெட்பிளிக்ஸ் வாங்கிய தனுஷ் படம்.. எத்தனை கோடி?

இப்படி ஒரு விளம்பரத்தில் நடிக்கலாமா?!.. அஜித்துக்கு கடும் எதிர்ப்பு!...

குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய சிவகார்த்திகேயன்!... வைரல் புகைப்படங்கள்...

D54 போஸ்டர் தரமா இருக்கு!.. ஃபேன்ஸுக்கு பொங்கல் ட்ரீட் வைத்த தனுஷ்!...

உச்சநீதிமன்றத்தில் ‘ஜனநாயகன்’ படக்குழுவுக்கு பின்னடைவு.. இதை எதிர்பார்க்கவே இல்லையே..!

Show comments