த்ரிஷாவின் தாராளம்!

Webdunia
சனி, 6 செப்டம்பர் 2008 (19:57 IST)
தாராளம் என்றவுடன் தறிகெட்டு ஓடிய கற்பனையை கொஞ்சம் கண்ட்ரோலுக்கு கொண்டு வாருங்கள். நாம் சொல்ல வந்தது கால்ஷீட் தாராளம்.

கஜோல், பத்மப்ரியா என்று மர்மயோகி ஹீரோயின் ரோலுக்கு பல பெயர்கள் அடிபட்டது. ஆனால் அதிர்ஷ்டம் அடித்தது என்னவோ த்ரிஷாவுக்கு. கதை கேட்டு தனது கேரக்டரில் மனதை பறிகொடுத்துள்ளார் த்ரிஷா என்பது அவரது நட்பு வட்டாரத்திலிருந்து கசிந்த தகவல்.

தமிழில் சொல்லிக் கொள்ளும் ஹிட் எதுவுமில்லை. நயன்தாரா புயலில் நெ. ஒன் நாற்காலி ஏற்கனவே ஆடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மர்மயோகி வாய்ப்பு, வராது வந்த மாமணி. அதனாலேயே மொத்தமாக நூறு நாட்களுக்கு கால்ஷீட் அள்ளிக் கொடுத்துள்ளார்.

லேசா லேசாவில் அறிமுகமான பின் இவ்வளவு நாட்கள் த்ரிஷா எந்தப் படத்திற்கும் கால்ஷீட் கொடுத்ததில்லை. ரொம்ப தாராளம்தான் இல்லையா!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments