ஷங்கர் அறிக்கை!

Webdunia
வதந்தி பரப்பினால்தான் வாய் திறப்பார்கள் போல. ஷங்கரின் ரோபோ பற்றி மாய்ந்து போய் எழுதுகின்றன பத்திரிக்கைகள். அவர் தரப்பிலிருந்து சின்ன செய்தியாவது வரவேண்டுமே. சைலண்டாக தென் அமெரிக்கா கிளம்பிவிட்டது ரோபோ டீம்.

ரோபோ பெயரை எந்திரம், இயந்திரம், எந்திரன்... என்று மாற்றியிருக்கிறார்கள் என ஆளுக்கொரு பெயரை சொன்ன பிறகே, ஷங்கர் தரப்பு மெளனம் கலைத்திருக்கிறது. ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் படம் குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதன் சாராம்சம்.

படத்தின் பெயர் எந்திரன். துணை தலைப்பு தி ரோபோ. உலகப் புகழ்பெற்ற கவிஞர் பார்லோ நெருதாவின் பெரு நாட்டில் அவருக்கு பிடித்தமான மச்சு பிச்சு மலையில் எந்திரன் படப்பிடிப்பு தொடங்குகிறது.

மென் இன் பிளாக், பேட்மேன் ரிட்டர்ன்ஸ் போன்ற ஹாலிவுட் படங்களுக்கு காஸ்ட்யூம் டிஸைன் செய்த மேரி இ வாக், மனிஷ் மல்கோத்ராவுடன் கைகோர்க்கிறார். அனிமேஷனுக்கு ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டுடியோ. சண்டைக்கு மேட்ரிக்ஸ் புகழ் யென் ஹ ு பிங், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வேலைகளை பங்கு போடுகிறவர்கள் ஐ.எல்.எம்., கே.இ. எ ஃப்.எக்ஸ்., ஹாங்காங்கின் சென்ட்ரோ, மென்போர்ட்.

எந்த ஹாலிவுட் படத்தையும் சவாலுக்கு இழுக்கவே இந்த ஹைடெக் தொழில்நுட்பம். எந்திரன்... ஆரம்பமே அமர்க்களம்ணே!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments