புதுமுகம் ஜோடியாக மீரா ஜாஸ்மின்!

Webdunia
வெள்ளி, 5 செப்டம்பர் 2008 (19:52 IST)
மர்மங்களின் தொகுப்பாக இருக்கிறார் மீரா ஜாஸ்மின். தமிழ் சினிமாவில் சிறிது காலம் தலைமறைவாக இருந்தவர் திரும்பி வந்திருப்பது ஒரு புதுமுகத்துடன் நடிக்க.

முன்னணி ஹீரோக்களுக்கு முதுகு காட்டும் இவர், புதுமுகத்துடன் நடிக்க எப்படி ஒத்துக்கொண்டார்? காரணம் மீராவின் நலம் விரும்பிகளுக்கே தெரியவில்லை.

வெற்றிவேந்தன் இயக்கும் ஆதிநாராயணன் படத்தில் மீரா ஜாஸ்மின் நாயகி. நாயகன் புதுமுகம் கஜன். ஆதிநாராயணனின் படப்பிடிப்பு தற்போது புதுவையில் நடந்து வருகிறது. மீரா ஜாஸ்மின் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து வருகிறார் இயக்குனர் வெற்றி வேந்தன்.

ஆதிநாராயணனுக்கு இசை ஸ்ரீகாந்த் தேவா. பாக்ஸ் ஆ ஃபிஸ் புரொடக்சன்ஸ் பாலாஜி படத்தை தயாரிக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!

விஜய் சேதுபதி நடிப்பில் முத்து என்கிற காட்டான் - விமர்சனம்

Show comments