காட்டுக்குள் மோகினி!

Webdunia
ஜகன் மோகினி ரீ-மேக்கை பிரமாண்டமாக எடுத்து வருகிறார் இயக்குனர் விஸ்வநாதன்.

நமிதா, நிலா, தெலுங்கு நடிகர் ராஜா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் நடந்தது. அழகிரி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். படத்துக்காக பிரமாண்ட அரங்குகள் போடப்பட்டன.

விட்டலாச்சாரியாரின் ஜகன் மோகினியின் ரீ-மேக் என்றாலும், இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப க த ¨யில் நிறைய மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக, கடலில் முத்துக் குளிக்கும் பெண்ணாக சித்தரிக்கப்பட்டுள்ளார் நமிதா.

முத்துக் குளிப்பவர்களின் குலதெய்வம் சீமா தேவி. பிரமாண்டமான சீமா தேவி சிலையொன்றை உருவாக்கி, பாடல் காட்சியொன்று எடுக்கப்பட்டுள்ளதாம். சீமா தேவி சிலையை உருவாக்கியவர், கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்திலுள்ள தலக்கோணம் காட்டில் தற்போது ஜகன் மோகினி படப்பிடிப்பு நடந்து வருகிறது. நமிதா நடிக்கும் காட்சிகள் இங்கு படமாகிறது.

விசாகப்பட்டினத்திலும் சில காட்சிகள் எடுக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர். நமிதா கடலில் முத்துக் குளிக்கும் காட்சியைப் படமாக்க வெளிநாட்டிலிருந்து விசேஷ கேமரா வரவழைக்கப்பட உள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் ஆண் போட்டியாளரை மகனாக தத்தெடுக்க விரும்பும் சுசித்ரா.. காரணம் இதுதான்..!

தொடங்கிய 7 மாதத்தில் முடிவடையும் விஜய் டிவி தொடர்.. இதற்கு பதில் புதிய சீரியல் எது?

திரையரங்குகளில் ரிலீசாகும் அஜித்தின் ஆவணப்படம்.. ரிலீஸ் தேதி இதுவா?

Show comments