ராஜாதி ராஜாவில் நமிதா!

Webdunia
செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (19:20 IST)
நம்ப முடியவில்லை இல்லையா. உண்மை, ராஜாதிராஜாவில் நமிதா இருக்கிறார்.

பிலிம் இல்லாமல் படமெடுத்தாலும், நமிதா இல்லாமல் படம் எடுக்க மாட்டார் ஷக்தி சிதம்பரம். அந்தளவுக்கு கதையைவிட நமிதா கிளாமர் மீது இவருக்கு நம்பிக்கை.

இவரின் ராஜாதிராஜாவில் ஆறு ஹீரோயின்கள். நமிதாவை ட்ரிபிள் ரோலிலேயே நடிக்க வைத்திருக்கலாம். என்ன காரணமோ ராஜாதிராஜாவுக்கு கால்ஷீட் இல்லையென கைவிரித்தார் நமிதா. இப்போது அவருக்கு பதில் நடிப்பவர் காம்னா.

படத்தில் கிளாமர் நர்சாக வருகிறார் காம்னா. இவரிடம் ஊசி போட நோயாளிகள் முட்டி மோதுவார்களாம். நமிதா நடிக்காத குறையைப் போக்க, காம்னாவின் கவர்ச்சி நர்ஸ் கேரக்டருக்கு நமிதா என்று பெயர் வைத்து திருப்திப் பட்டுக் கொண்டிருக்கிறார் ஷக்தி.

பொன் வைக்க வேண்டிய இடத்தில் பெயர்! இதுவும் நல்லாத்தான் இருக்கு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

40 வருஷ ரகசியம்! மேடையில் ரஜினியை பற்றி பேசி அழ வைத்த டிஆர்

‘படையப்பா’ டைம்ல ரஜினிக்கு உதவியா இருந்த அந்த நடிகர்! அதான் படம் சூப்பர் ஹிட்

275 நாள் ஓட வேண்டிய படம்.. அஜித் சொன்ன ஒரு வார்த்தை.. ரிசல்ட் இப்படி ஆயிடுச்சு

இதுல வெட்கப்பட ஒன்னும் இல்ல!.. திருந்துங்க!.. கொதித்த ஏ.ஆர்.ரஹ்மான்!....

பாருவை ஃபைனலுக்கு அனுப்ப வேண்டும்.. போர்க்கொடி தூக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்