மறுபரிசீலனையில் 'மா'

Webdunia
திங்கள், 1 செப்டம்பர் 2008 (20:07 IST)
சபா என்ற பெயரில் அறியப்படும் சபாபதி தட்சணாமூர்த்தி இயக்கும் 'மா' தொடக்க நாளான இன்றே எதிர்பாராத சிக்கலை சந்தித்துள்ளது.

மா தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள உறவை வித்தியாசமான கோணத்தில் சொல்லும் படம். பூமிகா குழந்தையின் தாயாக நடிக்கிறார். அவரது தோழனாக ப்ருத்விராஜ். முன்னாள் காத லன ாக ஸ்ரீகாந்த்.

மேனேஜர், நடிகர் என பல அவதாரங்கள் எடுத்த அ. கிருஷ்ணமூர்த்தி தயாரிக்கும் முதல் படம். இசைக்கு யுவன், கேமராவுக்கு எம்.வி. பன்னீர்செல்வம், வசனத்துக்கு பாஸ்கர் சக்தி என வலுவான கூட்டணி. இதனை உடைப்பது போல் ஒரு பிரச்சனை.

மா கதையை சில வருடங்கள் முன் சபா, பிரகாஷ்ராஜிடம் கூறியுள்ளார். சபாவுக்கு முன்பணம் தந்து டூயட் மூவிஸ் சார்பில் படத்தை தயாரிப்பதாக வாக்களித்துள்ளார் பிரகாஷ்ராஜ். டூயட் மூவிஸின் கடைசி இரு படங்கள் தோல்வி அடைந்ததால், மா புராஜெக்ட் தள்ளிப்போனது.

பிரகாஷ் ராஜுக்காக இனியும் காத்திருக்க முடியாது என சபா கண்டுபிடித்த தயாரிப்பாளர்தான் கிருஷ்ணமூர்த்தி. தன்னிடம் கதை சொல்லி முன்பணமும் வாங்கிய பிறகு எப்படி வேறொருவர் தயாரிப்பில் சபா அதே கதையை இயக்கலாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சென்றுள்ளார் பிரகாஷ்ராஜ். இதனால் தொடக்க நாளிலேயே பிரச்சனையை சந்தித்துள்ளது மா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

275 நாள் ஓட வேண்டிய படம்.. அஜித் சொன்ன ஒரு வார்த்தை.. ரிசல்ட் இப்படி ஆயிடுச்சு

இதுல வெட்கப்பட ஒன்னும் இல்ல!.. திருந்துங்க!.. கொதித்த ஏ.ஆர்.ரஹ்மான்!....

பாருவை ஃபைனலுக்கு அனுப்ப வேண்டும்.. போர்க்கொடி தூக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்

பராசக்தியும் இல்லை.. வா வாத்தியாரும் இல்லை.. 'தலைவர் தம்பி தலைமையில்' தான் பொங்கல் வின்னர்.. கம்பேக் கொடுத்த ஜீவா

"சங்கராந்தி வைப்ஸ்".. கணவருடன் சமந்தாவின் புகைப்படம் வைரல்..!

Show comments