விரைவில் அபியும் நானும் இசை!

Webdunia
திங்கள், 1 செப்டம்பர் 2008 (20:02 IST)
மோசர் பேர், டூயட் மூவிஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் அபியும் நானும். மொழி ராதாமோகனின் படம் என்பதால் எதிர்பார்ப்பு க்ராப் உயரத்தில்.

அப்பா மகள் உறவை சொல்லும் படம் இது. அப்பாவாக பிரகாஷ் ராஜும் மகளாக த்ரிஷாவும் நடித்துள்ளனர். பிரகாஷ் ராஜின் மனைவியாக ஐஸ்வர்யா.

டூயட் மூவிஸ் லாபம் பார்த்த ஒரே படம் மொழி. இரண்டாவது படமாக அபியும் நானும் இருக்கும் என்பதால் படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறார் பிரகாஷ் ராஜ்.

கிளாமராக மட்டுமே நடித்துவரும் தனது நடிப்பு திறமையை முழுமையாக வெளிக்கொண்டு வந்திருக்கும் படம் இது என்கிறார் த்ரிஷா.

பலருக்கும் பல விதங்களில் முக்கியமான இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடக்கிறது. இதற்காக முதல்வரிடம் தேதி கேட்டுள்ளனர். வித்யாசகர் இசை. முதல்வர் தேதி ஒதுக்கியதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments