விஜயசாந்தி வேடத்தில் சினேகா!

Webdunia
புதன், 27 ஆகஸ்ட் 2008 (19:44 IST)
ஹோம்லி வேடத்தில் நடித்துவரும் சினேகா முதல் முறையாக அதிரடி வேடத்தில் நடிக்கிறார்.

விஜயசாந்தியை லேடி சூப்பர் ஸ்டாராக உயர்த்திய படம், வைஜெயந்தி ஐ.பி.எஸ். காக்கி சட்டையில் ஒரு அதிரடி யுத்தத்தையே நடத்தியிருப்பார் விஜயசாந்தி. தெலுங்கில் தயாரான இப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 100 நாளைத் தாண்டி ஓடியது.

இதனை ரீ-மேக் செய்கிறார் சவுண்ட் பார்ட்டி இயக்குனர் ஆர்த்தி குமார். விஜயசாந்தியின் காக்கி உடையை இதில் அணியப் போகிறவர் சினேகா.

கோபத்தின் போதும் கிளாமரை பிரதிபலிக்கும் முகம் சினேகாவினுடையது. அடிதடி வேடத்தை அவரது ஹோம்லி முகம் தாங்குமா? பட்டாம்பூச்சிக்கு பருந்தின் றெக்கை... பார்ப்போம் அந்த அதிசயத்தையும்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்று ஆஸ்கர் நாயகன், 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் 59-வது பிறந்த நாள்.. ரசிகர்கள் வாழ்த்து..

ஜனநாயகனை வீழ்த்தியதா பராசக்தி ட்ரெய்லர்? உண்மையான வியூஸா? மோசடியால் வந்த வியூசா? சமூக வலைத்தளங்களில் பரபரப்பு..!

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

Show comments